பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அச்சிடக் காரணம் யாதென்பிரேல்-இத்திருக்குறளை மிஸ்டர் எலிஸ் துரையவர்களும், தாண்டவராய. முதலியார், முத்துசாமி பிள்ளை இவர்கள் அச்சிட்ட இரண்டு புத்தகங்களிலும் இல்லாத கட்டுக் கதைகள் பார்ப்பனர்கள் அச்சிட்ட புத்தகத்தில் எங்கிருந்து வந்த தென்று யாவரேனும் கேட்பார்களாயின், சரிதை அங்கு கிடைத்தது இங்கு கிடைத்தது என நழுவிவிடலாம், யாவரும் கேட்காதிருந்து விடுவார்களாயின் கதையை, விரித்து வலுத்து விடலாம் என்றெண்ணி 1837. இல் விசாகப்பெருமாளையர் இளவல் சரவணப்பெருமாளை யர் அச்சிட்ட புத்தகத்தின் முகப்பில் இப்பொய்ச் சரித் ஒரத்தை விரித்துப் பொருந்தாப்பொய்களைப் பொருத்தி விட்டார். அப்பொருந்தாப் பொய்கள் யாதெனில் விசாகப் பெருமாளையர் செய்து வைத்துள்ள பொய்க்கதா அகவலில் ஏழு பிள்ளைகள் பிறந்ததென்று நிறுத்தி விட்டார். சரவணப்பெருமாளையர் நான்காவது அச்சிட்ட புத்தகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒவ்வோர் வென்படி: களைப் பாடி விட்டதென்றும் அப்போது இச்சரவணப் பெருமாளையர் அருகினின்று ஒலைஎழுத்தாணிகொண்டு உடனுக்குடன் எழுதிக் கொண்டது போலும் ஏழுவெண் பாக்களைப் பாடிச் சேர்த்து விட்டார். விசாகப்பெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தில் நாயனார் வைசிய குலப்பெண்ணை மணந்தார் என்று வரைந்திருக்கின்றார். - அதன்பின் சரவணப் பெருமாளையர் அச்சிட்ட புத்தகத்தில் நாயனார் வேளாள குலப் பெண்ணை மணந்தாரென்று வரைந்திருக்கின்றார். .