பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

ஓவியமாகத் தீட்டும்படி தனது நண்பனும், உயர்ந்த வண்ணக் கலைஞனுமான அப்பெல்லஸ் என்பவனின் கலைக்கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தானாம் அலெக்ஸாண்டர்.

e நூல்: அலெக்ஸாண்டர் (1954) பக்கம்-183.

நூலாசிரியர் :கெளதமன்

அதி வீர ராம பாண்டியர் (1564-1604)

அதி வீர ராம பாண்டியர் என்பவர், தென்னாட்டில் தென்காசியிற் செங்கோல் செலுத்திய சந்திரவம்சத்துச் சிற்றரசர்களில் ஒருவர். இவர்காலம் ஏறக்குறையஆயிரம் வருஷங்களுக்கு முன்பென்றும், இவருடைய ஜ்யேஷ்ட சகோதரரது பெயர் வரதுங்க ராமபாண்டியரென்றும், அவர்திருக்கருவையில் அரசாண்டு கொண்டிருந்தனரென் றுங்கூறுவர். இவர்செய்த நூல்கள்-நைடதம், கூர்ம புரா ணம் இலிங்கபுராணம், காசிகாண்டம், திருக்கருவைக் கலித்துறை யந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப்பத்தந் தாதி, திருக்கருவை வெண்பாவந்தாதி, நறுந்தொகை எனப்படும் வெற்றிவே ற்கை முதலியன. கொக்கோகம் எனப்படும் மதன நூலும் இவர்செய்த தென்பது, சிலர் கொள்கை.

இவர் இந்த அந்தாதிகள் இயற்றியதற்குக் காரணம்: இவர்க்குக் காமவொழுக்க மிகுதியால் தொழுநோய் நேர்ந்தது பற்றிக் கழிவிரக்கங்கொண்டு திருக்கருவைத் தலத்தில் வந்து சிவபிரான்மீது அந்தாதிகள் மூன்றையும் பாடித்துதித்த மாத்திரத்தில் அந்நோய் நீங்கப்பெற்று நற்கதியடைந்தனர் என்று கூறுவர்.

O நூல்: திருக்கருவை வெண்பாவந்தாதி. (1930 இரண்டாம் பதிப்பு) உரையாசிரியர்: சே. கிருஷ்ணமாசாரியர் வை.மு. கோபால கிருஷ்ணமாசாரியர். பக்கம்-2.