பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 -இவற்றுக்குப் பின்னாலுள்ள பாட்டுப் புத்தகங்களிலோ சினிமாப் பத்திரிகைகளிலோ, எஸ். எஸ். கொக்கோ வேறு படங்களில் நடித்த தகவல் கிடைக்கவில்லை. மாம்பலம் பாண்டி பஜாரில் எஸ். எஸ். கொக்கோ ஒர் அறையில் தனிமையில் வாழ்த்து வந்ததாகவும், தனிமையை மறக்க ஒரு குரங்கை வளர்த்து வந்ததாக வும், வறுமைத் துயரை மறக்கக் குடிக்கத் தொடங்கிய தாகவும், 1944-ஆம் வருஷத்தில் ஓர் நாள் மயிலாப்பூர் குளத்தங்கரையில் செத்துக் கிடந்ததாகவும் 1948-ஆம் வருஷத்தின் சினிமா பத்திரிகை யொன்றில் செய்தி கிடைத்தது. 0 இதழ்: தினமணி கதிர், 7-4-85 பகுதி: நட்சத்திரத் தேடல்கள் 35. கட்டுரை யாளர் : அறந்தை நாராயணன். கோல்ரிட்ஜ் உலகப் புகழ்பெற்ற இலக்கிய மேதையாகப்போற்றப் படுபவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ். இவர் தமக் கிருந்த நோயின் தொல்லையை மாற்றிக் கொள்ள அபின் உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தார். e நூல் : 200 மேதைகள். பக்கம் - 154. சர்ச்சிலின் மகள் சாரா சர் லியோனார்ட் ஸ்பென்சர் வின்ஸ்டன் என்பது தான் சர்ச்சிலின் முழுப் பெயர். சர்ச்சில் என்றதும் நம் மனத்திரையில் "அவருடைய கை விரல்களால் காட்டும் *வி. பார் விக்டரி என்ற வெற்றிச் சின்னமும் சுருட்