பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 152


எது நேரினும், தன் கொள்கைகளின் மீது உறுதியாக நிலைக்கும் பொருட்டு ஆன்மா எடுத்துக் கொள்கின்ற சூளுரையே அது. எழுத்திலோ பேச்சிலோ ஏதேனும் சூளுரை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது தேவையுமில்லை. ஏனெனின், ஒரு நிலைபெற்ற கொள்கையின்பால் நெறி திறம்பாத பற்றுறுதி கொண்டிருத்தலே சூளுரைகள் அனைத்தின் சாறமாகும்.

நிலைபெற்ற கொள்கையில்லாத மனிதன் பெருமளவு சாதனை செய்யவியலாது. சூழ்வினைத் திறமென்பது ஒரு சதுப்பு நிலமும், முள்ளடர்ந்த பாழிடமுமாகும். அங்கு மனிதன் தன் சொந்த ஒழுக்கக் கேடு என்னும் வழுக்குச் சகதியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டு, தானே உண்டுபண்ணிக் கொள்கின்ற ஏமாற்றங்களென்னும் முள்களால் குத்தப்பட்டுக் காயமடைகின்றான்.

மனிதன் உறுதியான, நிலைபேறுடைய, தீர்மானமுடைய மனம் கொண்டிருக்கவேண்டும். காரியங்கள் அனைத்திலும் பற்றுக்கோடாகக் கொள்வதற்கு பொருந்துவனவும், முரண் கருத்துகளென்னு சிக்கலினுடே நன்கு வழிகாட்டுவனவும், வாழ்வுப் போராட்டத்தில் தீர்க்கமான துணிவைத் தருவனவுமான விதிகளை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அவ் விதிகளைக் கைக் கொண்ட பின்பு, ஆதாயத்தையோ மகிழச்சியையோ விட அவனுக்கு அதுவே தன்மையாக இருக்க வேண்டும். வாழ்வைவிட அது சிறப்பானதாக இருக்கவேண்டும். அவன் என்றுமே அவற்றை விட்டொழிக்காத வரையில்,