உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தொடுத்திருக்கிற போர் என்று கருதுவதைக் காட்டிலும், ஒரு தத்துவம் இன்னொரு தத்துவத்தின் மீது தொடுத்திருக்கிற போர் என்று சொன்னால் அது மிகையாகாது. தீர்மானத்திலே குறிப்பிட்டிருப்பதுபோல சர்வாதிகார மனப்பான்மையோடு, சர்வாதிகாரக் கொள்கையில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கிற பாகிஸ்தானுடைய சர்வாதிகாரி, இந்தியாவில் நாம் கட்டிக் காத்து வருகிற னநாயகத் தத்துவத்தின் மீ தும், நம்முடைய வாழ்க்கை முறையின் மீதும், நம்முடைய மதச் சார்பற்ற கொள்கையின் மீதும் இன்றைக்குப் படை எடுத்திருக்கிறார் என்று நாம் திட்டவட்டமாகக் கொள்ளவேண்டும். தவறான பிரச்சாரம் அமெரிக்க நாட்டுக்கு நான் சென்றிருந்த நேரத்தில் அங்கே ஒரு தவறான பிரச்சாரம், இப்போது பாகிஸ்தான் தொடுத்திருக்கிற போர் பற்றிப் பத்திரிகைகளில் கட்டுரை வாயிலாகச் செய்யப்படுவதை நேரில் காண்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டிருக்கிற இந்தத் தகராறு இன் று நேற்று அல்ல. பல நூற்றாண்டுக்காலமாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்து வருகிற தகராறினுடைய மற்றொரு கட்டம் தான் என்று அந்த நாட்டிலுள்ள சில பத்திரிகைகள் ம் வருணித்திருப்பதை நான் கண்டேன். சில நிருபர்களைச் சந்தித்த நேரத்தில் அது தவறு என்பதற்கான விளக்கங்களை அளிக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது, இந்து முஸ்லிம் தகராறு அல்ல: இந்தியாவில் ன்றைக்கு முஸ்லிம்களே இல்லாமல் இல்லை. குறிப்பாகச் சால்லப்போனால் இந்தியாவில் இருக்கிற முஸ்லிம்களுடைய தொகை இன்றைக்குப் பாகிஸ்தானில் இருக்கிற முஸ்லிம் களின் எண்ணிக்கையைவிட அதிகமானது என்று சொன்னால் அதை யாரும் மறுக்க இயலா து. அவர் அவர் அந்த அளவுக்குப் பாகிஸ்தானைவிட இன்றைக்கு இந்தியாவில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். களுடைய உரிமைகள் இங்கே மதிக்கப்படுகின்றன. களுடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் அனைவருமே இந்து முஸ்லிம்கள் என்கிற அளவில் இல்லாமல் இந்தியர்கள் என்கிற அளவில் ஒன்றுபட்டு இந்த நாட்டி னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றுவதிலும், இந்த நாட் டுக்கு வருகிற ஆபத்துக்களைத் தவிர்ப்பதிலும் முன்னிற்கின்ற காட்சியினை நாம் காண்கின்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/10&oldid=1706844" இலிருந்து மீள்விக்கப்பட்டது