உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெற்றி நமதே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தேர்தல் முடிவு மதிக்கப்படாமல், சர்வாதிகாரியினுடைய கால டியில் மிதிக்கப்பட்டு அந்த ஜனநாயக எழுச்சிக்கு நாயகனா கத் தோன்றிய திரு முஜிபுர் ரகிமான் சிறைப் பிடிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் கிழக்கு வங்கத்தில் கொல்லப்பட்டு, ஒரு கோடி மக்களுக்கு மேல் அகதிகளாக இந்தியாவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கோடி அகதிகள் இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள் என்றால் வேறு நாடுகளில் உள்ளவர்களே என்னிடத்தில் கேட்கிறார்கள், "55 கோடி மக்கள் இருக்கிற இந்தியாவில் இன்னும் ஒரு கோடி மக்களைத் தாங்கிக் கொள்ளக்கூடாதா?" என்று. ஐம்பத்தைந்து கோடி மக்கள் தொகை இருக்கிற ஒரு நாட்டில் மேலும் மக்கள் தொகை பெருகுகிறது என்பது வேறு, திடீரென நுழைகிறார்கள் என்பது வேறு: நம்முடைய நாட்டு மக்கள் தொகை பெருகக்கூடாது என்பதற்காகப் பல்வேறு திட்டங்களையும், முயற்சிகளையும் எடுத்துக்கொண்டிருக்கிற நேரத்தில், பெருகுவது மாறித் திடீரென்று மக்கள் தொகை நுழைந்தால் அதை ஓர் அரசு எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும் ? எப்படிச் சமாளிக்க முடியும் ? சமாளிக்க முடியாமல் எவ்வளவு கஷ்டத்தை இந்திய அரசு அனுபவிக்கிறது? இதுவரை எவ்வளவு கஷ்டத்தை இந்திய அரசு அனுபவித்திருக்கிறது ? வரை எவ்வளவு கோடி ரூபாய் செலவிட்டிருக்கிறது என்ப வற்றை எல்லாம் அனைத்துலக நாடுகளுக்கு நாம் எடுத்து விளக்கியிருக்கிறோம். து இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அம்மை யார் அவர்கள் அனைத்துலக நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை மிகத் தெளி வாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். பாகிஸ்தான் செய்கிற அட்டூழியங்கள் வேறு நாடுகளில் இருக்கிற அரசுகளால் ஒருவேளை மறைக்கப்பட்டாலும் அந்த நாட்டு மக்கள் உண்மையை நிச்சயமாக உணர்ந்திருக் கிறார்கள் என்றே நம்புகிறேன். அமெரிக்க மக்களின் அனுதாபம் யாருக்கு? குறிப்பாக, அமெரிக்க நாட்டு அரசாங்கம் இந்திய- பாகிஸ்தான் விஷயத்தில் இருவரையும் சமமாகவே கருது கிறது என்றாலும், இந்தியாப் பக்கம் இல்லாமல் பாகிஸ்தானை முழு மூச்சாக ஆதரிக்க அல்லாடிக் கொண்டிருக்கிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/12&oldid=1706846" இலிருந்து மீள்விக்கப்பட்டது