பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 93

அதனால், தன்னைப் பற்றிய பாதுகாப்பு நீக்கப்படு கிறது.

அப்போது, வெறுப்பு, தற்பெருமை, தன்னலம் போன்றவற்றிற்கான ஆணிவேர் வெட்டிவிடப் படு கிறது; அ:னால், தூய்மை உண்டாகிறது;

பொருள்களின் மெய்ப்பாடு வெளிப்படுகிறது; உண்மை தெரிகிறது, உண்மையை உணர்த்துகிறோம்.

அதுவே பொது அறமுறை கட்டளை பற்றிய அறிவு; அழியாத்தன்மை பெற்ற பேரின் பம்.

மாணவன் : ஒ உண்மையானவரே! பொது அறமுறைக் கட்டளை மிகவும் எளிதான்து,

இருந்தும்கூட., யார் இதனைப் புரிந்து மனத்தில் கொள் கிறார்கள்?

எண்ணிப் பார்ப்பதற்கு மிகவும் அழகானது, அப்படி இருந்தும் யார் அதனை உற்றுப் பர்க் கிறார்கள்?

நடுநிலமை வகிப்பதில் குறையற்றது, இருந்தும் யார் அதற்குச் செவி சாய்த்து ஏறறுக் கொள்கிறார்கள்?

ஆசான் : தூய்மையான உள்ளம் கொண்ட ஒருவன் தான்் அதனைக் கற்றுக் கொள்கிறான், உற்றுப் பார்க் கிறான், மனத்தினால் பற்றிக் கொள்கிறான்;

பழியினால் பெறப்படாத செயல்களைக் கொண்டு அவன் வாழ்க்கை நடத்துகிறான்;

அவனின் அறம் எல்லையற்றது; அது உயிர் வாழும் எல்லாவற்றையும் அணைக்கிறது;

தவறு இழைக்காத தோற்றத்தையே அவன் பார்க் -கிறான்.