பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு i வேளைகளில் மட்டும் ஏற்றி வைக்கப்படும்; அப் பொழுது மட்டும் மங்கலான ஒளி வீசும். இது போன்ற விமானம் வேறில்லை என்றேன். ஆனல் வேறு விதமான, ஆயினும் இதுபோல் மிக வேகமாக ஓடக்கூடிய, விமானங்கள் ஏழெட்டு உள. சில சமீபத்தில் - அதாவது லட்சக் கணக்கான மைல் துாரத்தில் உள. சில வெகு தொலையில் - அதாவது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள. இவை ஒன்ருேடொன்று ஒருநாளும் மோதிக் கொள்ளா. இந்த விதமாக என் விசேஷ விமானத்தின் மேன்மைகளைப் பற்றி விஸ்தாரமாக எழுதிக் கொண்டே போகலாம். ஆனல் அப்படிச் செய்து வாசகரின் ஆச்சரிய உணர்ச்சியைத் தணித்து விட விரும்பவில்லை. அதனல், இந்த விமானம் எனக்கும் என் சந்ததியார்க்கும் மட்டும் சொந்த மானதன்று, உங்களுக்கும் உங்கள் சந்ததியார்க் கும் சொந்தமானது என்று கூறினல் போதும். 20