பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு : கும் உயிரும் ஒன்றே. ஒருடல் ஒருயிர் உடைய கண்பர்கள் நாங்களே ! அது மட்டுமா ? சாதாரணமாக நண்பர்கள் வேறு பெயர் உடையவர்கள். காதலரில் புருஷ னும் மனைவியும்கூட ஒரே பெயர் வகிப்பதில்லை. பெயரைக் கேட்டவுடனேயே, இவர் கணவர், இவர் மனைவி என்று கூறிவிடலாம். ஆனல் எங்கள் விஷ யத்தில் ஒரு நாளும் அவ்விதம் சொல்லிவிட முடி யாது. எங்கள் இருவர்க்கும் ஒரே ஒரு நாமங்தான் என் தோழன் பெயரே எனக்கும் என்று கூற ԹԵfTLD - என் தோழனை விட்டு நான் தனியாகத் தோன் றுவதில்லை. இலைமறை காய் போல் என் தோழ னில் நான் முழுதும் மறைந்துள்ளேன். பிறர் என் தோழன் இருப்பதைக் கொண்டே நானும் இருப்ப தாக உணர்கின்றனர். என் தோழனுள்ள இடத்தில் நானும் இருக்கிறேன். ஆனல், அதுபோல் நானுள்ள இடத்தில் அவன் இருக்கிருன் என்று கூற முடி யாது. அது மட்டுமன்று. நானுள்ள இடம் என்று கூடச் சொல்வதற்கில்லை. நான் ஒரு நாளும் தனித் திருப்பதில்லை. என் தோழனே எனக்கு ஆதாரம். நாங்கள் இருவரும் இருவர் அல்லர், ஒரு வரே என்று உறுவது உபசார மொழிகள் அல்ல. முற்றிலும், முக்காலும் உண்மையாகும். சாதாரண | 22