பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நோய் என்னும் பெயரால் ஒரு விளக்க நூல் வெளியிடு கின்றனர். சில வருடங்களுக்கு முன் வெளிவந்த நூலில், இந்திய மகாஜனங்களில் பெரும்பாலோர் அபாயகரமான வறுமையில் ஆழ்ந்து கிடக்கின் றனர் என்று பொருள்படும் வரிகள் காணப் படுகின்றன. வறுமை என்றும், அது அதிகம் என்றும் கூறினுேம். இந்நூல் அபாயகரமானது ' என்று கூறுகின்றது. இதன் பொருள் யாது ? ஒருவர் நோயால் வருந்துகிறா வைத்தியர் வந்து பார்த்து அபாயகரமான நிலைமை என்று மொழிக் தால், உடனே காம் நோயாளி வெகு சீக்கி ரம் இறந்துவிடலாம் என்று தீர்மானிக்கிருேம். அதுபோல்தான் நமது வறுமையின் அபாயத் தன்மையும். வறுமை அளவு கடந்து முதிர்ந்து விட்டது. விஷம் தலைக்கேறிவிட்டது. உடனே சரியான சிகிச்சை செய்யாவிட்டால் நாடு நசித்துப் போகும். அம்மட்டோ ? அபாயத்தை அகற்ற சிகிச்சை செய்யவும் காணுேம். அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பம்பாய் சர்வகலாசாலையின் அர்த்த சாஸ்திர நிபுணர் திரு. ஸி. என். வக்கீல் என்பவர், ' நாளுக்கு நாள் வறுமை அதிகம். காற்பது வருடங்கட்கு முன் நமது வருமானம் ஏழு ரூபாயால்ை இப்பொழுது அது ஐந்து ரூபாயே என்று கணிக்கிரு.ர். ஆகவே 81