பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

129

சரி என்று தலையசைத்தார் குணசேகர்.

‘நம்ம முத்துசாமி இருக்குறானே! அவனை எதேச்சையா சந்திச்சேன்’ என்றார் இன்பநாதன்.

எங்கே? என்பது போல குணசேகர் விழிகள் மலர்ந்தன.

ஒரு பெண்ணுடன் ஓடிப்போய், தன் எதிர் கால வாழ்வை வளமுள்ளதாக மாத்திக்குறேன்னு போனானே, அவனை ஒரு ஆஸ்பத்திரியில சந்திச்சேன்....

குணசேகர் ஆச்சரியமாகப் பார்த்தார்....

ஆமாம்! காசநோய் ஆஸ்பத்திரியில....

அவனை மயக்கி அழைச்சிகிட்டு போன பொண்ணு இவனை ஏமாத்திட்டு, வேறொருத்தன் கூட போயிட்டா! அவன் நல்ல பண வசதி உள்ளவனாம்! முத்துசாமி வெத்தாள்னு தெரிஞ்சதுக்குப்புறம் அவளுக்கென்ன வேலை?

அதே கவலையில் இவன் அதிகமா சிகரெட் குடிச்சானாம் ஏற்கெனவே, பெண்சகவாசம்...அதிகமா புகை... வறுமை. என்ன ஆச்சு ? கடைசியில் டி.பி வந்தாச்சு....

விளையாட்டுல ஈடுபட்டா டி.பி. வந்துடும்னு பொது மக்கள் நினைச்சு நம்பற மாதிரி இப்படி ஆளுங்க இருந்தா இந்த நாட்டுல விளையாட்டு எப்படி உருப்படும்?

இந்த முத்துசாமி பண்ணுன தப்பு யாருக்கு தெரியும்? இந்த நிலமையில் இவனை யாராவது பார்த்தா, விளையாட்டுல சேர்ந்ததனால் தான் இப்படி ஆயிட்டான்னுதான் நினைப்பாங்க.