பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

அவரது கால்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கதறினான் நேசலிங்கம். குணசேகர் மெதுவாகக் கண்விழித்துப் பார்த்தார் . நேசலிங்கம் வந்திருக்கான். தங்கப்பதக்கத்தோட வந்துருக்கான். நம்ம நேசலிங்கம்... நம்ம நேசலிங்கம். இன்பநாதன் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தார்.

குணசேகர் மெதுவாகக் கண்களைத் திருப்பி நேசலிங்கத்தைப் பார்த்தார். ‘அய்யா நான் தான் நேசங்க. உங்களை மோசம் பண்ணலே. உங்களை விட்டுவிட்டுத்தான் ஓடினேனே தவிர, நான் ஒரு நிமிஷம் கூட, உங்களை மறக்கலே, உங்களை வந்து பார்க்க வெட்கப்பட்டுட்டுதான் நான் கண்காணாத இடத்துக்கு ஓடினேன். நான் திரும்பி வந்துட்டேன்யா...

குணசேகர் நேசலிங்கத்தைப் பார்த்து! யாரென்று பரிந்து கொண்டார். எழுந்திருக்க முயற்சி செய்தார் சுவாதினம் இழந்த கையை தூக்க முயற்சித்தார். கால்களை அசைத்துப் பார்த்துக் கொண்டார். முடியவில்லை. ஒன்றும் முடியவில்லை.

அய்யா ! இந்தாங்க தங்கப்பதக்கம்... தங்கப்பதக்கம். உங்க நேசலிங்கம் கொண்டு வந்திருக்குறேன்.

அசைக்க முடியாத கையோ அதிர்ந்து கொண்டிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அசைக்க முயற்சித்தார். பட படத்துப் போய் முகம் வியர்த்து விட்டது.

இன்னெரு கையால் தங்கப்பதக்கத்தை வாங்கி வாஞ்சையுடன் அழுத்திப் பிடித்துக் கொண்டார் குணசேகர். இருபுறமும் மாறி மாறி விரல்களால் தடவிப் பார்த்தார். அவள் மனதில் பொங்கும் மகிழ்ச்சியை முகம் மிகத் தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது...