பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

செயற்கைத்தனத்திற்கு அப்பால் இருக்கவேண்டும் என்பதுபோல், சென்னை நகருக்கு சற்று வெளியே, அறிவார்ந்த அமைதி நிலவுவது போன்ற பகுதியில் இருந்தது அந்த கிளினிக் சுற்றிலும் , அசோக மரங்களும், தென்னையுமாய் பின்னிக் கிடந்த அந்த இடத்திற்குச் சென்ற மெய்யப்பனும், குமாரும், கிளினிக்கில் வேலை பார்க்கும் ஒருவர், வேலியைத் தாண்டிய குரோட்டன்ஸ் செடிகளை உள்ளே இழுத்துப் போடுவதையும், இன்னொருவர், ஏற்ற இறக்கத்தோடு உள்ள சில பூச்செடிகளையும், புதர்க் கொடிகளையும், கலைக் கண்ணோடு கத்தரித்து விடுவதையும் பார்த்தார்கள். பார்த்துக் கொண்டே நடந்தார்கள்.

வரவேற்பு அறையில், வாங்கோ மிஸ்டர் குமார் என்று அழைத்தவரைப் பார்த்ததும், மெய்யப்பன் அசந்து விட்டான். சைக்கியாட்ரிஸ்ட் என்றால், சுழித்த புருவத்தோடு, சிந்திக்கும் தலையோடு, பைப் கொண்ட வாயோடு, ஒவ்வொருவரையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர் என்று நினைத்தவனுக்கு, தன்னைவிட ஐந்து வயதுதான் அதிகமாய் உள்ளவர் போலவும், எதுவுமே தெரியாத அப்பாவி' போலவும், கலகலப்பாக இருந்தவரைப் பார்த்ததும், சிறிது ஏமாற்றங்கூட வந்தது. இவரிடமா குணப் பிச்சை கேட்கப் போகிறோம் என்பதுபோல் வெட்கப்பட்டுக் கொண்டான். மெய்யப்பனும், குமாரும் உட்கார்ந்தார்கள்.

"நல்லா உட்காருங்கோ... மிஸ்டர். மெய்யப்பன். ஐ அம் ரகுராமன்.... சைக்கியாட்ரிஸ்ட்.”

சிறிது நேரம் மெளனம். ஒருவர் முகத்தில், ஒருவர் அந்தரங்கமாக எதையோ தேடுவது போன்ற சங்கடமானசந்தேகமான பார்வைகள். மெய்யப்பனுக்கு அப்படியே, அங்கேயே உயிர் போனால் தேவலை என்பதுபோல்