பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 157


"அக்கா. தங்கையில்லையேன்னு தவிச்சவன் நான்... நண்பர்கள், தங்களோட அக்கா தங்கைகளைப் பற்றி பேசம்போது, நமக்கும் அப்படி ஒருத்தி இல்லையேன்னு ஊமையாய் அழுதவன் நான்... அந்தச் சமயத்தில், 'தம்பீ'ன்னு அழைத்தே... என் உடம்புக்கு ஒண்ணுன்னா... உடனே வீட்ல இருந்து மருந்து கொண்டு வருவே... உன்னை கூடப்பிறந்த அக்காளாய் நினைத்தேன்... அக்கா என்ற வார்த்தையை, உயிர்விட்டுச் சொன்னேன்... அப்படிப்பட்ட என்கிட்ட நடித்து, மானேஜர், தகாதபடி நடக்குறதாய் சொல்லி, நீ தகாதபடி நடந்துட்டியே.... நீ எப்படியும் நட என்னை ஏன் தம்பின்னு சொன்னே.... வாணியக்கா .... மோசம் பண்ணிட்டியே... அக்கான்னு ஆசை காட்டி... நான் பாசத்தில் குழையும்போது, நீ வேஷத்தை மாத்திட்டியே... உன்னை கொலை பண்ணனும்... ஒன்னை... துண்டு துண்டாய் வெட்டணும்.... ஒன் பிணத்தை நாய் கடித்துத் தின்னணும்... நீ அக்கா இல்ல... அரக்கி.... என்னைப் பைத்தியமாக்கணுமுன்னு பகல் வேடம் போட்ட நடிகை.... அய்யோ ஏமாந்துட்டேனே... ஏமாத்தப்பட்டேனே..."

"போதும் மெய்யப்பன், இந்த வாணி மட்டுந்தானா உங்களை ஏமாற்றினாள்? வேற யாரும் உண்டா..?"

"உண்டு... இவளைவிட மோசமானவள் உண்டு... விமலா. விமலா..."

"சரி.... அவளால் ஏமாந்த சம்பவத்தைச் சொல்லுங்க..."

"விமலா... ஒன்னோட கடற்கரையில் பேசினேன்... ஒரே சாப்பாட்டைச் சாப்பிட்டோம்... தொட்டுப் பழகினோம்...‌ ஒன்னை வேலையில் சேர்த்தது நான்..."

"இருக்கட்டும்..‌. மெய்யப்பன், விமலா படகுப் பக்கம் இருக்காள் ரவி, அவளோடு நெருக்கமாய் இருக்கான்... நீங்க... இப்போ... இதோ பார்க்கிங்க... கத்துறிங்க... புலம்புறிங்க... எப்படி.. எப்படி?"

“படகுப் பக்கம்... ரவியோட இடித்துக் கொண்டு இருக்கிறாள்.... என்னை பித்துக்குளின்னு சொல்றாள்....