பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

வெளிச்சத்தை நோக்கி...


"கற்பு... மண்ணாங்கட்டிக் கற்பு... இப்போதான், டாக்டர் மு. வரதராசனார் நாவலைப் படிச்சேன். அதிலே அவர் ஒருவனும், ஒருத்தியும் கூடி வாழ்கிற காலத்தில், அவன், அவளுக்கும், அவள், அவனுக்கும் விசுவாசமாய் இருக்கதுதான் கற்புன்னு" புது விளக்கம் கொடுக்கிறார். கூடி வாழாதவன் கணவன் இல்ல... அவன் போட்ட கயிறு கழுத்தில் கிடந்தால், அந்தப் பெண் மாடுன்னு அர்த்தம்... ஒனக்கு ஆட்சேபம் இல்லைன்னா, நானே அந்த கயிற்றைக் கழட்டிட்டு... முருகன் கோவில் அறிய... நல்ல கயிறாய் போடுறேன்... சம்மதமா...?"

சத்யா சம்மதமற்றவள்போல் எழுந்தாள். மெய்யப்பன் மறந்துபோன ஒன்றைக் கேட்டான்.

"நீ... பெரியவர் ரெங்கசாமிகிட்டே கேளாமல் எதுவும் செய்யமாட்டேன்னு எனக்குத் தெரியும்... வேணுமானால் கேட்டுப்பாரு... இரண்டு நாள் கழித்து... முருகன் கோவிலுக்கு வந்து, ஒன் பதிலைச் சொல்லு... அது வரைக்கும், எனக்கு பழைய நிலைமை திரும்பாமல் இருக்கதுக்கு, பிரார்த்தனை செய்..."

சத்யா மெல்ல மெல்ல முணுமுணுத்தாள்.

"ரெங்கசாமி சாமியார்கிட்டே கேட்க வேண்டியதில்லை. அவரே, 'தள்ளி வச்ச புருஷன்' இல்லாம கூட... ஒனக்கு மேலான வாழ்வு வருமுன்னு... சொல்லாமல், சொல்லி விட்டார். வெளிப்படையாய், 'எவன் கூடயாவது வாழ்க்கை நடத்துன்னு' அவர் சொல்லமாட்டார். அவரும்... இந்த சமூகத்துல இருக்கவராச்சே... சரி... எனக்கு நேரமாவுது... அண்ணி வார சமயம்..."

மெய்யப்பன் பேசிக்கொண்டு நிற்கவில்லை. அவள் முதுகைத் தன் மார்போடு அணைத்து, மஞ்சள் கயிற்றைத் தூக்கி, தலைக்கு மேலே கொண்டு வந்து, கழற்றினான். கழற்றியதை ஒரு மூலையில் விட்டெறிந்தான். அவள் இப்போதும் நடந்ததை நம்ப முடியாததுபோல், அவனைப்