பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 வெளிச்சத்தை நோக்கி...


முடியைத் தடவியபோது, முள் குத்துவது போல் நோவெடுத்தது. இந்தத் தாடிக்கும், விமலாவின் மாற்றத்தை உணர்ந்த காலத்திற்கும் ஒரே வயது. 'எப்படி இருந்தவள், எப்படி மாறிவிட்டாள். ஆலமரத்தை உள்ளடக்கிய விதை போல, அப்போதே இந்த மாற்றத்தை உள்ளடக்கி இருந்திருப்பாளோ... உள்ளத்துள் பதுக்கி வைத்திருந்த ஏதோ ஒரு விஷமரத்தின் விதை, இப்போது, உதட்டில் லிப்ஸ்டிக்காக, புருவத்தில் கருவேல முள் போன்ற மையாக, கை விரல்களில் கோர நகங்களாக, கால் பாதங்களில் ஹை ஹீல்ஸ் செருப்புக் களாக, வேலிச் சுவரில் சாய்ந்திருந்த செடியே அந்த சுவரை எட்டி உதைத்துக்கொண்டு மரமாய் பீறிட்டது போன்று, வயிற்றில் இருந்து உதைபட்டு, இடுப்பில் விழுந்த புடவையாக விசாலப்பட்டிருக்கிறதோ...'

மெய்யப்பன்,அவளை ஏறிட்டுப் பார்த்தான். தற்செயலாகச் சந்தித்த அவள் கண்களில் இருந்து தன் கண் வீச்சை எடுக்காமல் பார்த்தான். அவள் தன் முகத்தை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு கண்ணாடியை முறைத்தாள். அவனுக்கு அந்தச் சந்தர்ப்பத்திலும், அவளின் செயற்கைத்தனத்திலும், இன்னும் சாகாமல் கிடந்த இயற்கை அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் கண்ணோரத்தில் என்னதான் மை போட்டிருந்தாலும், அந்தக் கண்ணுக்குள், பேதமை என்று புலவர்கள் சொன்னார்களே - அந்த அப்பாவித்தனம் இருப்பதுபோல் தோன்றியது. அதில் கர்வத்திற்குப் பதிலாக ஏதோ ஒரு குற்றவுணர்வும், எப்படியும் இந்த மாற்றத்திலிருந்து மீண்டுவிட வேண்டும் என்பது போன்ற ஒரு படபடப்பும் இருப்பது போலிருந்தது. அப்படி நினைக்க நினைக்க, தான்தான் அவளை மீட்க வேண்டும் என்பதுபோல் நினைத்தான். அப்படி நினைத்துக் கொண்டே மீண்டும் அவளைப் பார்த்தபோது, அவள் தன்னை அந்த மீட்புக்கு நம்பியிருப்பது போலவும் தோன்றியது. அந்த நம்பிக்கை, கருவேல முள்போல் காட்டிய புருவத்தை, வில்போல நினைக்க வைத்து, கோரமாய் புலப்பட்ட நகங்களை அழகுக் கோலமாய் காட்டியது. ஹைஹீல்ஸ்