பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வெளிச்சத்தை நோக்கி...


சாவோம். நீ அப்பவும் வேடிக்கை பார்ப்பது மாதிரி பார்ப்பே. 'சாவியும் இல்ல. கீவியும் இல்ல. பெரியவங்க வந்த பிறகு கேளுங்கன்னு முகத்துல அடிச்சாப்போல கேட்கப்படாதோ... முகத்தை நீட்டிக்கிட்டுத்தான் போகனுமோ?'

சத்யாவிடம் இருந்தும் லேசாக எதிர்ப்புச் சத்தம் கேட்டது. "அவரு குனிந்த தலை நிமிராத மனுஷன்..."

" நல்லா கவனிச்சுத்தான் வச்சிருக்கே... எவ்வளவு நாளாய் இது தெரியும்? எவ்வளவு காலமாய் அவன் சாவி கேட்கான்?"

"நான் அழகி... அதுல தினமும் கேட்குறார்..."

"ஓஹோ... அந்தக் குறை வேற இருக்கா? அழகியா இருந்தால், அவன் பார்த்திருப்பானேன்னு ஏக்கம் வருதோ? எல்லாம் அந்த மனுஷன் கொடுக்கிற இளக்காரம்... எதிர்த்தாப் பேசறே...? வரட்டும். ஒன் புருஷன் வீட்ல ஒன்னை நிறுத்திட்டு வரச் சொல்றேன்... அங்கேயும் இப்படித்தான் நடந்திருப்பே..."

சத்யாவிடம் இருந்து பதிலில்லை... வாயொடுங்கி, மெய்யொடுங்கி நின்றிருக்க வேண்டும். அண்ணிக்காரி, 'வெற்றி விழா' கொண்டாடினாள். "ஏண்டி வாய் செத்துட்டு? நல்லா பேசி முடிக்கு முன்னால நான் வந்துட்டேங்கற ஏக்கமா... மகராசியா... தினமும் அவனுக்கு வீட்டைத் திறந்துவிடு... அப்புறம் ராத்திரில, அவனுக்குத் தாகம் எடுக்கும்... தண்ணி கொண்டு கொடு... இல்லன்னா... அங்கேயே போய் இரு... வீட்டுக்குள்ளே வராதடி அந்த மனுஷன் வாரது வரைக்கும் இந்த இடத்திலயே இருக்கணும்... உள்ளே வரப்படாது... அவரு வந்து ரெண்டுல ஒண்ணை முடித்தால்தான் முடியும்."

எல்லாமே அடங்கிப் போனதுபோல் இருந்தது. அண்ணிக்காரியின் சத்தத்தைக் காணோம்... அவளுக்கு, திட்டிய களைப்பாக இருக்கும்... சத்தியாவுக்கு, திட்டப்பட்ட களைப்பாக இருக்கு