பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 வெளிச்சத்தை நோக்கி...


எடுக்கவில்லை. அலுவலகம் இப்படியென்றால், அதற்கு மேல் வீடு. சத்யாவின் அண்ணன் இன்னும் வரவில்லை.மெய்யப்பன்குளியல றைக்குப் போகும் போதெல்லாம் சத்யாவின் அண்ணி ஜாடைமாடையாகத் திட்டுகிறாள். அந்தப் பக்கம் எதேச்சையாக சத்யா வந்தால், அண்ணி, முகத்தை இடிக்கப் போவதுபோல், கைகளை ஆட்டிக் கொண்டே, கண்டபடித் திட்டுகிறாள். "தடிப்பயல வீட்டில வச்சதால.... ஒனக்கு தடிப்பேறிப் போயிட்டு...." என்றுகூடச் சொல்லிவிட்டாள். வேறு அறை பார்க்கலாம் என்று பார்த்தால், எல்லா வீட்டுக்காரனும் ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் கேட்கிறான். என்ன செய்யலாம், ஏன் இப்படி ஆயிட்டேன்... எல்லோருக்கும் நன்மையைத் தவிர, தீமையை செய்யாத என்னிடம் ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள். நான் அசடோ... நான் முட்டாளோ... நான் பைத்தியமோ...

அலுவலகக் கடிகாரத்தை வெறித்துப் பார்த்தபடி, மெய்யப்பன் உட்கார்ந்திருந்தான். ஆடிட் பைலை எடுத்து, சில 'பாயிண்டுகளுக்கு' பதிலெழுதப் போனான். ஆனால், பதிலில்லாமல் போன, 'நான் அசடா... முட்டாளா...' என்ற கேள்வியே அந்த பாயிண்டுக்குள் பாயிண்ட்டுக்களாக நின்றன. மாலை நேரம், மஞ்சள் நிறம் வெயிலாக விழுந்தது.

எல்லோரும் போகத் துவங்கினார்கள். போய் விட்டார்கள். விமலாவை ரவி வந்து கூட்டிக் கொண்டு போய்விட்டான். வாணி, மானேஜர் அறைக்குள் போய்விட்டாள். குமார், முன்னதாகவே போய்விட்டான். நாளையில் இருந்து இரண்டு மாத லீவில் போகிறானாம். இதை அவன்கூடச் சொல்லவில்லை. ஆபீஸ் பியூன் சொல்லித்தான் தெரியும்.

மெய்யப்பன் வெளியேறினான். எதிரே இருந்த ஒரு டீக்கடையில் போய் அமர்ந்து கொண்டான். எப்படியாவது, வாணி வெளியே வந்ததும்,அவளின் பாரா முகத்துக்குப் பதில் கேட்க வேண்டும் என்று உட்கார்ந்தான். 'அவள் எப்படிப் போனால்நமக்கென்ன' என்றும் ஒரு எண்ணம்