பக்கம்:வெளிச்சத்தை நோக்கி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் 87


நீண்டநேரம் கொலைகார எண்ணங்களுக்குள் உலவி விட்டு - எறும்புகள் மொய்த்த ஈயாக அவன் முடங்கினான். காலையில் டாக்டரைப் பார்த்ததும், கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கை லேசான ஆறுதலைக் கொடுக்க மெய்யப்பன், உணர்வொடுங்கி, உடலொடுங்கி, உயிரும் ஒடுங்கியதுபோல் பிணம்போலக் கிடந்தான்.

(13)

ஒரு வாரம் ஓடிப்போனது. ஆனால், மெய்யப்பனைப் பிடித்த பயங்கரமான பிரமைகள் ஓடவில்லை. மாறாக, கொஞ்ச நஞ்சமிருந்த மெய்யான உணர்வுகளும், அந்தப் போலி உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்து, சிக்கலடைந்தன. ஆரம்பத்தில், பிரமைகளை உதறிவிடலாம் என்ற நப்பாசையில், அங்குமிங்குமாக நடந்தும், தரையில் புரண்டும், கட்டிலைச் சாத்தியும், சினிமாக்களைப் பார்த்தும் தன்னைச் சமாளிக்க முயற்சி செய்தான். சில சமயங்களில், நிமிடத்தை யுகமாக நினைப்பவன் போல், துடித்தான். சில சந்தர்ப் பங்களில், யுகத்தையே நிமிடமாக நினைக்கத் துவங்கியவன் போல், பரபரக்க விழித்தபடி, தலையைச் சாய்த்து, கைகளை ஒடுக்கி இருந்தான். இதர சமயத்தில், கிட்டத்தட்ட பழுதடைந்த பஞ்சாலை மாதிரி ஆகிவிட்டான்.

உள்ளத்திற்கு ஏற்றாற்போல், உடம்பும் மாறுதல்களைக் காட்டியது. தலையில் கிரீடம் வைத்ததுபோன்று, நெற்றி விலகியதுபோல், நீர் கோர்த்து நின்றது. காதுகள் நமைச்சலும் குத்தலும் கலந்து 'சைத்தியமாகி' விட்டன. கண்கள் உள்நோக்கின. அளவுக்கு மீறிப் பசியெடுக்கையில்,