பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


11. மேல் வீட்டில் மத்தளமாம்;

கீழ்வீட்டில் நாட்டியமாம்.

க்யூபா


12. காட்டிலே பச்சை;
கடையிலே கறுப்பு;
வீட்டிலே சிவப்பு.

13. சின்னப் பையனைப் பிடித்தேன்;
மஞ்சள் சட்டையைக் கிழித்தேன்;
வாய்க்குள் போட்டு அடைத்தேன்;
வயிற்றுக் குள்ளே சேர்த்தேன்.

14. ஆடச் சொல்லிச் சட்டை போடுவார்;

ஆடும் முன்பே கழற்றி விடுவார்.

ஹெய்டி


15. ஒரே குளத்தில் ஒரே மீன்.
வெளியே எட்டிப் பார்த்தாலும்

வேறு குளம் போகாது.

மேற்கு இண்டீஸ்


16. வயிறு புடைக்கத் தின்றால்தான்
நிமிர்ந்து நிற்பான் குண்டப்பன்.

17. இரவு வந்தால் தோட்டத்தில்
எத்தனையோ பூ பூக்கும்.
பொழுது விடிந்ததுமே
பூவெல்லாம் மறைந்துவிடும்.