பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுகதை
பற்றிய
கதைகள்

சன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும்: பள்ளிக்கூடங்களில் 'விடுகதைப் பாடம்' என்று ஒரு பாடம் இருந்துவந்தது. விடுகதைகளை எப்படி விடுவிப்பது, புதிய புதிய விடுகதைகளை எப்படி இட்டுக் கட்டுவது என்று மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள்! ரோமாபுரிப் பள்ளிகளில் 'விடுகதைப் பாடம்' கட்டாயப் பாடமாக இருந்து வந்ததாம்!

கிரேக்க நாட்டில் பெரிய விருந்து என்றால் நிச்சயம் அங்கே விடுகதை இருக்கும். விருந்து முடிந்ததும், எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துகொள்வார்கள். ஒரு நிபுணர் விடுகதைகள் போடுவார். மிகமிகச் சிக்கலாக அந்த விடுகதைகள் இருக்கும். யார் அதிகமான விடுகதைகளை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு மாலை போட்டு 'வாழ்க ! வாழ்க !' என்று வாழ்த்துக் கூறுவார்கள்.

***