உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 101 புரண்டு படுத்தாள். புரளும்போது அவள் முனகிய ஒலி, தாழ்வாரத்திலிருந்த நயினாவைத் துடித்தெழச் செய்தது. உள்ளே வேகமாக ஓடிவந்தான். “என்ன வேண்டும்?" என்று பதைப்போடு கேட்டான். ஆனந்தி நயினாவைச் சிறிதுநேரம் கண்கொட்டாமல் பார்த்தாள். அந்தப் பார்வையிலே வியப்பும், விசுவாச உணர்ச்சியும், குளிர்ச்சி யும் நிறைந்திருந்ததை அவன் தெளிவாகப் புரிந்துகொண் டான். அவன் உள்ளத்துப் பூரிப்புக்கு முடியாமல் தவித்தான். அணைபோட தூங்கியதால் 'நர்ஸ் மருந்து கொண்டுவந்தாள். எழுப்பாமல் போய்விட்டாள். எழுந்ததும் சாப்பிடச் சான்னாள், தரட்டுமா?” என்று கேட்டான். கேட்டான். அப்படிக் கேட்கும்போது அவன் தொண்டை அவனுக்குக் கட்டுப் படாமல் அடைத்துக்கொள்வானேன்? நாக்கிலே நடுக்கம் காணப்படுவானேன்? விசித்திரமான உணர்ச்சி ! மிக விசித்திரமான உணர்ச்சி ! அவனை ஆட்டிப் படைத்தது அந்த உணர்ச்சி! ம ஆனந்தி எழுந்ததும் தன்னைக் கூப்பிடச் சொல்லி யிருந்தாள் நர்ஸ் ! அவனோ, அவளைக் கூப்பிட்டால் ஆனந்திக்குத் தன் கையால் மருந்து கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிட நேரிடுமே எனப் பயந்தான். ஆனந்தியும் மருந்தைச் சாப்பிடுவதற்குச் சம்மதித்துத் தலையை ஆட்டி னாள். நயினாவின் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆயிற்று. அவ னுக்கு என்ன தெரியும்; மருந்திலே விஷம் கலக்கப்பட் டிருக்கும் சேதி! இந்தா ; இந்த விஷத்தைச் சாப்பிடு" என்று சொல் வது போல அந்த மருந்தைச் சாப்பிடச் சொல்லப் போகிறான். அதற்காகத்தான் பாவம்; அவன் அவ்வளவு நேரமாகக் காத்துக்கிடந்திருக்கிறான். மேசையிலே இருந்து மருந்து சீசா, நயினாவின் இரு தயத்திலே பெரியதோர் சூறாவளியை எழுப்பி, அவன் ஆசை மாளிகையைத் தூள் தூளாக உடைத்தெறிந்து