உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 103 என்றவாறு கிறேன் போலீசை! எங்கும் ஓடாதே!" ஆனந்தி, நயினாவின் கையை இறுகப்பிடித்துக்கொண் டாள். அவளுக்கு விபத்தினால் ஏற்பட்ட பலஹீனம் கூட எங்கேயோ மறைந்துவிட்டது ஆனந்தி தன் கையைப் பிடிக்கவேண்டுமென்று நயினா ஆவல் கொண்டிருந்தது என்னவோ உண்மை; ஆனால் இது போன்ற ஒரு பயங்கரச் சூழலில் அவள் கை அவன் மீது படுவது, அக்கினிக்கட்டை படுவதுபோலவேயிருந்தது. ற நயினா, நின்றபடியே அவள் கால்பக்கம் தலையைச் சாய்த்துக்கொண்டு, தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். என்ன பதில் கூறுவது என்றே அவனுக்குப் புலப்பட வில்லை. எதைச்சொல்லி அவளை நம்பவைக்கமுடியும்? "என்னை நம்பவேண்டும்! நான்..... நான்... நான்..." என்று அழத்தொடங்கினான். 'என்னை அப்படி நினைக்கிறாயா ஆனந்தி? விஷமிட்டுக் கொல்லுகிற அளவுக்கு உனக்கும் எனக்கும் என்ன பகை ? யோசனை செய்து பார் ஆனந்தி!" என்று கதறினான். "நமக்குள்ளே பகையுமில்லை; உறவுமில்லை!... யாரோ அனுப்பியிருக்கிறார்கள் உம்மை, எனக்கு எமனாக!” என்று பதட்டத்தோடு அழுத்தந் திருத்தமாகக் கூறினான் ஆனந்தி. .. - அய்யோ! அப்படியெல்லாம் சொல்லாதே! உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டது முதல் - உன் உதாரகுணத்தை அறிந்தது முதல் நல்ல உள்ளத்திற்குத் தலைவணங்கும் என் மனத்திலே நீ அழியாத ஓவியமாகிவிட்டாய்! ஒருநாள்! சில மணி நேரங்கள்! அதற்குள் நான் உன் அழகுக்கும், அன்புக்கும் அடிமையாகிவிட்டதாகவே நினைத்துக்கொண் டேன், வாய்ச் சொற்கள் இல்லை. விழிகளும் மொழிகள் பரிமாறவில்லை-மௌன நிலையிலிருந்த உன் மோகன ரூபம் என்னை மயக்கிப்போட்டுவிட்டது! இந்த ஓருதலைக் காதல் பலிக்குமோ, பலிக்காதோ என் பலிக்காதோ என்று துடித்துக்கிடந்தேன். ஒருமுறை உனக்கு பழரசம், அல்லது பால்-'ஹார்லிக்ஸ்', அல்லது மருந்து - ஏதாவதொன்றைத் தந்து உபசரிக்கிற -