உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 105 சௌந்தர்யம்! வெளிப்படையா கவும், துணிச்சலாகவும் உன் அபிப்பிராயத்தின் விளிம்பைக்கூடத் தெரிந்துகொள் ளாமலும் நான் இப்படிப் பேசுவதற்காக மன்னித்துவிடு! என் காதல் தெய்வத்துக்கு நான் விஷம் கொடுத்துக் கொல்ல நினைப்பேனா?" இதைச் சொல்லியவாறு முகத்திலே அறைந்து கொண்டு அலறினான் நயினா. எழுந்தது ஆனந்திக்குக் கலக்கமும் குழப்பமும் போட்டிபோட்டு சற்றுநேரம் அசைவற்று இருந்தாள். அவள் விழிகள் எதிரேயுள்ள சுவரின்மீது பதிந்திருந்தன. நயினா வும் அவளையே பார்த்தவாறு நின்றான். அவன் கண் களிலே நீர் பெருக்கெடுத்தவாறு இருந்தது. என்று கூப்பிட்டான். அதில் பாசம், பரிவு, பயம், பக்தி அனைத்தும் அடங்கியிருந்தது. ஆனந்தி’ 99 ஆனந்தி திரும்பினாள். மருந்துச் சீசா இருந்த மேசையை உற்றுப்பார்த்தாள். ஏதோ ஒரு பொருள்! ஆம்; அந்தச் சிறிய விஷச் சிமிழ்! அதுதான் இருந்தது! " அதை எடுங்கள்!” என்றாள் ஆனந்தி. அவள் குரலே நயம் இருந்தது இப்போது! நயின ஓடிப்போய் அந்தச் சிமிழை எடுத்து ஆனந்தியிடம் கொடுத்தான். அதை அவள் நன்றாகக் கவனித்தாள். அது அவளது ஆஸ்பத்திரியிலே இருந்த சிமிழ். அந்த அடையாளத்தைக் கண்டுபிடித்துவிட்டாள்! “ அது எப்படி இங்கு வந்திருக்கும் ? " - இந்தக் கேள் விக்கு அவளால் உடனே பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. "டைகர் இங்கு வந்தாரா?' என்று நயினாவிடம் கேட்டாள். "பகலில் வந்ததுதான் இரவில் - வரவில்லை!" என்றான் அவன். "நான் உங்கள்மீது தவறாக சந்தேகப்பட்டுவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள்" என்றாள். அவள் கண்களில்