உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 107 எவ்வளவோ திமிறினான் டைகர். காவற்காரன் விடவில்லை. அதற்குள் நயினா முகம்மது டைகரின் மீது பாய்ந்து. அவன் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டான். டைகரைச் சுற்றி மருத்துவமனை சிப்பந்திகள் வளைத்துக் கொண்டார்கள். காவற்காரனுக்கு இப்போதுதான் வலியும் வேதனையும் தோன்ற ஆரம்பித்தது. அவன் தோள்பட்டை யிலிருந்து வழிந்த குருதி உடல் முழுவதையும் நனைத்தது. முதலுதவிக்காக அவனை அவசர அவசரமாகப் படுக்கைக் குக் கொண்டுபோனார்கள். காவல் பார்த்துக்கொண்டிருக்கும்போது சிறிது கண் ணயர்ந்து விட்டதாகவும், அப்போது யாரோ ஒருவன் சுவரேறிக் குதித்து வெளியே போக முயற்சிப்பதாகத் தெரிந்து அருகே ஓடியதாகவும், சிறிதும் எதிர்பாராவித மாக அவன் துப்பாக்கியால் தன்னை சுட்டதாகவும், அதை யும் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் அவனைப் பிடித்துக் கொண்டதாகவும் காவற்காரன் விளக்கமுரைத்தான். போலீசாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, சில நிமிடங் களுக்கெல்லாம் வந்துசேர்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் எவ் வளவுதான் கேட்டபோதிலும் பதில் சொல்லாமல் பிடிவாத மாக மெளனம் சாதித்தான் டைகர். அவன் கைதுசெய்யப் பட்டு போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டான். நயினா முகம் மது வாயிலாக விவரமறிந்த ஆனந்தி வியப்பில் ஆழ்ந் தாள். பயங்கர பூகம்பத்திலே சிக்கிக்கொண்டவளைப் போல நடுங்கினாள். இரு பெரும் ஆபத்துகளிலேயிருந்து அவள் தப்பித்துக்கொண்ட போதிலும் சொல்ல முடியாத ஒரு பீதி அவள் உள்ளத்தைக் கலக்கியது. நடந்து செல் லும்போது காலடியில் மிதிபட்டுச் சாகக்கூடிய எறும்பினுங் கேவலமாகத் தன்னைக் கருதிக்கொண்டு மிருகத்தனமான வேலையில் ஈடுபட்டிருக்கிறானே டைகர் என்று நினைக்கவே அவளுக்கு அச்சமாக இருந்தது. "டைகர் யார் ?" "அவன் ஏன் இங்கு வந்தான்?” 01 1 இந்தப் பயங்கர நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன?"