170 வெள்ளிக்கிழமை 66 என்றான். உடனே தேவர் அவசரமாக எழுந்து, சிந்தா மணி, கொஞ்சம் இரு ! இதோ வந்துவிட்டேன்!” என்று கூறிவிட்டுக் காவற்காரனுடன் வெளியே போனார். சிந்தா மணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. பெங்களூரில் தன்னை விடுவித்த பாலகங்காதரத் தேவர் யாராக இருக்கும்?- குழப்பிக்கொண்டாள். எழுந்து அந்த ஹாலிலேயே உலவினாள். அங்கிருந்த வாறு தோட்டத்துப்பக்கம் பார்த்தாள். தேவர் காவற்கார னுடன் அவசரமாக அந்தப்பக்கம் வந்தார். ஒரு கதவின் பச்சும் ஒளிந்துகொண்டு என்ன நடக்கிறது என்று னி தாள். அவள் வரும் வழியில் சந்தித்தாளே; அந்த மனிதனாகத்தான் இருக்கவேண்டும் ; ஒருவன் தள்ளாடிய படி தேவர் அருகே வந்தான். எஜமான்! காரியத்தை முடிச்சுட்டேன் !" வாய் குழறியபடி சப்தம் போட்டான். என் கவ டே - இடும்பா ! சப்தம் போடாதே!" என்றார் தேவர். சிந்தாமணிக்கு இடும்பன் யார் என்று விளங்கிவிட் டது. வழியில் அவள் சந்தித்த ஆளாகத்தானிருக்கவேண் டும ; குரலும் அதுபோலத்தானிருக்கிறது என்று முடிவு கட்டிக்கொண்டாள். காவற்காரன் இடும்பன் மீது "டார்ச்" விளக்கை அடித்தான்! இடும்பன் ஆடை முழுவதும் இரத் தக்கறையாக இருந்தது. அவன் கையிலே ஒரு பளபளப் பான அர்வாளும் இருந்தது. அந்த அரிவாள் முழுதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. சிந்தாமணிக்கு மயக்கம் வந்துவிடும்போலிருந்தது, சமாளித்துக்கொண்டு கவனித் தாள். இடும்பனைப் பார்த்துத் தேவர் கேட்டார்- "என்னடா, என்ன ஆச்சு ? யாரும் உன்னைப் பார்க் கலியே?" 61 இல்லிங்க எஜமான்! நான் மாடியிலேயே காத்திருந் தேன். யாரோ இரண்டு பசங்கள் ; ஒருத்தன் தான் அந்த நயினா முகம்மது ; இரண்டு பேரும் ரொம்ப நேரம் முழிச்சி கிட்டு, என்னென்னமோ ரகளை பண்ணினானுங்க! ஆனந் திக்கும் அந்தப் பசங்களுக்கும் வம்புச் சண்டையெல்லாம்
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/171
தோற்றம்