உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கருணாநிதி 45 அழைத்துக்கொண்டு போனான். அவமானப்படுகுழியில் தள்ளப்பட்டபோதிலும்-பயங்கரம் நிறைந்த எதிர்காலத் திலேயிருந்து நிரந்தரமாக மீட்கப்பட்டுவிட்டோம் என்ற ஆறுதல் ஒருபக்கம் தலைகாட்ட அழகப்பன் வெகு வேகமாக சிவநேசரின் வீட்டுக்குள்ளே நுழைந்தான். - என்று என்ன மாப்பிள்ளை ! இவ்வளவு வேகம் !' சிரித்துக்கொண்டே கேட்டார் சிவநேசர். "ஒகோ! பல்லை வேறு இளிக்கிறீரா? பவிசு கெட்டவர்களே! எங்கள் குடும்ப களரவத்தையே குழியில் தள்ளி கோபுரம் கட்ட நினைத்த கொடுமதியாளர்களே! சிரிப்புவேறா சிரிப்பு!" என்று கனல் கக்கினான் அழகப்பன். சிவநேசர் அதிர்ச்சி அடைந்தார். சிவகாமி மரமானாள். தாயாரம்மாள் விழித்தாள். நயினா முகம்மது அழகப்பனை சாந்தப்படுத்துவதில் முனைந்து நின்றான். 'நயினா! என்னப்பா என்ன நடந்தது!" என்று தாயாரம்மாள் பரபரப்போடு விசாரித்தாள். அம்மா! நாசம் நடக்க இருந்தது! மோசம் போக இருந் தோம்! நல்ல வேளை ; வேஷம் கலைந்துவிட்டதம்மா-தப்பி விட்டோம்! தப்பிவிட்டோம்!" என்று தணல்மேல் நிற்ப வனைப்போல கூச்சலிட்டான் அழகப்பன். "புரியவில்லையா அம்மா உனக்கு! இந்தப் பேயர்கள் பெற்ற குலக்கொடியை இப்போது பார்க்கக்கூடாது என்று தடை போட்டார்களே, ஏன் தெரியுமா? நான் நட்சத்திரத்தின்மீது பாரத்தைப் போட்டார்கள்; அதன் மர்மம் புரியுமா? மாப்பிள்ளை வர வேண்டாம் பெண்வீடு பார்க்க என்று கடிதம் மூலம் வலி யுறுத்தியிருந்தார்களே; அதற்குக் காரணம் புரிந்துவிட்ட தம்மா!" என்று பேசிக்கொண்டேயிருந்தான் அவன். சிவ நேசருக்கோ தன் கண்முன்னால் நடைபெறும் சம்பவமும், காதிலே விழும் நெருப்பு மொழிகளும் உண்மைதானா?- என்ற ஐயமும் அதிர்ச்சியும் பிறந்தது! அசைவற்றுப் போனார் அவர். " "மாப்பிள்ளை என்ன சொல்லுகிறார் ?" என்று சாவ தானமாகக் கேட்டார் நயினாவிடம்! நயினா மௌனமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/46&oldid=1708072" இலிருந்து மீள்விக்கப்பட்டது