உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வெள்ளிக்கிழமை திருக்கிற குழந்தையை சிந்தாமணியிடம் படுக்க வைப்பது என்பதுதான் திட்டம். ஒரு பெண்ணிடம் ஒரு குழந்தை படுத்திருப்பது-கேட்பதற்கு பயங்கரமாக இல்லையென்றா லும் - பிரசவ ஆஸ்பத்திரியில் -அதற்கு அர்த்தமே வேறா யிற்றே! அதுவும் தாலி கட்டப்படவேண்டிய தையல் ! கன்னி கழியாத பருவப்பெண் ! திருமணத்திற்கு நாள் பார்க்கவேண்டியதுதான் பாக்கி -என்ற அளவிலேயுள்ள நிலைமை ! சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் காண்டு சதிவேலையை வெற்றிகரமாக முடித்துவிட்டான் டைகர்! அழகப்பன் மருத்துவ மனையிலிருந்து அக்கினிப் பிழம்பு போன்ற சாற்களை இறைத்துவிட்டுப் போனதும் ஆனந்தி நிலை தடுமாறிவிட்டாள். சிந்தாமணி படுத்திருந்த பக்கமாக வேகமாக நடந்தாள். அவள் படுக்கையில் அமர்ந்தவாறு பக்கத்திலிகுந்த குழந் தையை வியப்போடு பார்த்துக் கலவரப்பட்டுக்கொண்டி ருந்தாள். அவளால் அசையவோ எழுந்திடவோ இயலாது. - று "என்னம்மா இது, ஏது இந்தக் குழந்தை ?" என்று ஆனந்தியிடம் கேட்டாள் சிந்தாமணி. ஆனந்தியின் கண் களில் நீர் பொல பொலவென உதிர்ந்தது. ஓடிப்போய் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சிந்தாமணி! சிந்தா மணி!" என்றாள். அதற்குள் அவள் தொண்டை அடைத் துக்கொண்டது. “என்னம்மா - 66 எனக்கு ஒன்றுமே புரிய வில்லையே ! பக்கத்திலே குழந்தை ! கேட்டால் அழுகை! யாரோ இரண்டு பேர் வந்தார்கள் ; அவர்கள் எங்க அப்பாவை ஏதோ பேசினார்கள்! என்ன விஷயம்?" என்று விசாரிக் கத் தொடங்கினாள். "ஒன்றுமில்லை சிந்தாமணி ! உடம்பை அலட்டிக் கொள்ளாதே! மயக்கத்தில் உனக்கு அப்படியிருக்கிறது !" என்று கூறிவிட்டு குழந்தையுடன் அதைவிட்டு அகன்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/55&oldid=1708081" இலிருந்து மீள்விக்கப்பட்டது