உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வெள்ளிக்கிழமை க் - சேவலின் முழக்கத்தை அவள் எத்தனையோ நாள் கேட்டிருக்கிறாள். அத்தனை நாளும் அதைப்பற்றி அவள் சிந்தனை செய்தது இல்லைதான்! சேவல் என்பது ஆண் பெட்டை என்பது பெண், இதையெல்லாம் இப்பொழுது ஏன் அவள் நினைத்து தனக்குத்தானே புன்னகை புரி கிறாள்! சேவல் கூவுகிறது, தன் வாழ்க்கையிலும் சேவல் கூவும் கட்டம் வந்து விட்டதா அவள் எண்ணுகிறாளா அந்த இன்ப நினைவுகளால் தனக்குத்தானே வெட்கப் பட்டுக்கொள்கிறாளா? மணிக்கூண்டுக் கடிகாரம் - பெரிய கோயில் மணி, இவைகள் எல்லாம் விடியற்காலையில் எப் போதும்போல் தங்கள் கடமையைச் செய்துகொண்டு தானிருக்கின்றன. மணிக்கூண்டு யந்திரத்தில் பழுது ஏற் பட்டாலன்றி, ஆலயத்து மணிக்காரன் தூங்கிவிட்டாலன்றி அந்த வைகறை யொலி நிற்பதேயில்லை. ஆனால் சிந்தா ல் மணியின் இருதயத்திலே மட்டும் என்றுமில்லாத யாழ் ஒலி முழங்குகிறது! இந்த ஒலி வழக்கமாக ஒலிக்கும் கடிகார ஒலியோ - ஆலய மணி யொலியோ அல்ல! அவை களினும் மேம்பட்ட ஒலி! . . வைகறையில் சங்கு ஊதும் தாதன் தெருவிலே போகி றான். அமைதிப் படுக்கையிலே சுருண்டு முடங்கிக்கிடந்த இரவு, அசதியை உதறிவிட்டு சோம்பல் முறித்தபடி எழுந்து உட்காருகிறது போலும் - அந்த ஊமைச் சத்தந் - தான் தாதனின் சங்கு மூலம் வெளிப்படுகிறதோ . என்னவோ? தௌ! தௌ!! தௌ!!! இந்தச் சங்கு முழக்கம் சிந்தாமணியை எங்கேயோ ஒரு புதிய உலகத்திற்கு அழைப்பது போலவே அமைந்துவிட்டது. 'ஊதுகிற சங்கை ஊதிவைத்தால் விடிகிற பொழுது விடியட்டுமே!" என்று பழமொழி சொல்வார்கள். சேவல் கூவுவதாலோ. தாதனின் சங்காலோ-ஆலய மணியாலோ- பொழுது விடி வதில்லை யென்பது அவளுக்குந் தெரியும். ஆனால், அன்று மட்டும் அவர்களால்தான் பொழுது விடியப்போகிறது என எண்ணி, பொழுது விடியக் காரணமாக இருக்கும் சேவலை - தாதனை - ஆலயத்து மணிகாரனை -மணிக்கூண் டுக் கடிகாரத்தை அவள் வாழ்த்திக்கொண்டேயிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/7&oldid=1708033" இலிருந்து மீள்விக்கப்பட்டது