கருணாநிதி 69 பதாகவும் அவமானத்தால் அவன் குன்றிப்போய்க் காணப்படுவதாகவும் அவனையே தனியே விட்டுப் போவது ஏதாவது பயங்கர விளைவுக்கு அஸ்திவாரம் அமைக்குமென்றும் எச்சரிக்கை செய்தான்! தாயாரம்மா ளும் நயினா கூறுவதுதான் சரியென்ற தீர்மானத்துக்கு வந்து அழகப்பனைத் தன்கூட பெங்களூருக்குப் புறப்பட வேண்டுமென்று பிடிவாதம் செய்தாள். அழகப்பனுக்கு தாயின் வார்த்தையைத் தட்டமுடியாமற் போய்விட்டது. அவனது ஆசைக் கனவுகள் அருமைத் தோழனால் அழிக் கப்படுகிறதேயென்று தனக்குத்தானே நொந்துகொண் டான். அவனுக்குத் தெரியாது; நயினாவின் உள்ளம் ஆனந்தியின் பாற் சென்றிருக்கிறது என்ற உண்மை அதுபோலவே நயினாவுக்கும் அழகப்பனின் ஆனந்தி மோகம் தெரிந்திட நியாயமில்லை ! வெளியிடவும் ஒருவருக் கொருவர் வெட்கம். விஷயம் சிறிது முற்றிய பிறகு வெளி யிடலாமே என்ற எண்ணம். அழகப்பனும் தாயாரம்மாளும் பயணத்திற்கான ஏற் பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினர். நயினா இருப்பது கூட டைகருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஒருவேளை ஆனந்தி, உண்மையை நயினாவிடம் கூட சொல்லிவிட லாமே என்ற அச்சம்! அதனால் அவன் சற்று அழுத்தந் திருத்தமாகவே, "யாரும் எங்கள் ஆனந்திக்குத் துணை வேண்டியதில்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பார்த்துக் காண்டு போங்கள்!" என்று கூறினான் ! நயினா அதற்குப் பதில் சொல்லவில்லை, விழிகளை அகலமாகத் திறந்தபடி டைகரைப் பார்த்துக்கொண்டே நின்றான். டைகர், தன்னை யறியாமல் தலைகுனிந்து கொண்டு ஊமைபோல அதை விட்டு அகன்றான். தாயாரம்மாள் 61 ஆனந்தியிடம் வந்து, கண்ணூ! ஊருக்குப் போய்விட்டு வர்ரேம்மா!" என்று ! நான் சொல்லிக் கொண்டான். ஆனந்தி பேசமுடியாமல் சம்மதம் தெரிவித்தாள். . விழிகளாலே அதற்குச்
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/70
தோற்றம்