உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வெள்ளிக்கிழமை கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். சத்திய மாகச் சொல்லுகிறேன்; சிந்தாமணியைக் கொண்டுவந்து உங்கள் கையில் ஒப்புவிக்கவேண்டியது என் பொறுப்பு! என் கடமை! நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது என் வேலை!" "சிந்தாமணி திரும்பி வருவதும் ஒன்றுதான் அவள் வராமல் அங்கேயே சாவதும் ஒன்றுதான்! அவளைப்பற்றி ஊர் முடிவுகட்டிவிட்டது! அவமானச் சின்னம் என்று அபிப்பிராயம் தெரிவித்து விட்டது! என் கண்மணி திரும்பி வந்து காலமெல்லாம் கண்ணீருங் கம்பலையுமாக கன்னி கழியாத சுமையாக இருப்பதைவிட அவள் செத்து விடுவது மேல்!" இதைச் சொல்லியபடி தலையைச் சுவரில் சாய்த்தவாறு கண்ணீர் உகுத்தாள் சிவகாமி. 66 சிந்தாமணிக்குக் களங்கம்! அதற்காகத்தானே பயப் படுகிறீர்கள் அத்தை! யாரும் அவளை இனிமேல் கல் யாணம் செய்துகொள்ள மாட்டார்களே என்றுதானே கவலைப்படுகிறீர்கள்! இதைவிட ஆயிரம் அபாண்டங்களை பதினாயிரம் பழிகளை அவள்மேல் சுமத்தினாலும் சரி; நான் தயாராயிருக்கிறேன் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள என்ன சொல்கிறீர்கள்?" என்றான் டைகர் - நல்லவன் போல நடித்து, உத்தமன்போல பணிந்து நின்று! சிவகாமி அவனை உற்றுநோக்கினாள்! ஆத்திரம் அவள் கண்களில் தோன்றியது! உதடுகள் துடித்தன அவளுக்கு! "ஏ! ராமகிருஷ்ணா! எல்லாம் உன் சூழ்ச்சிதானா சிந்தாமணியைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக நீ செய்த ஏற்பாடுகள் தானா இவையெல்லாம்?" என் என்று சினம் பொங்கி வழியச் சீறினாள் சிவகாமி! "என்ன அத்தை! உங்களுக்கும்மாமா மாதிரி ஏதாவது பிடித்துவிட்டதா என்ன? உண்மையிலே சொல்லுங்கள் சிந்தாமணி களங்கமற்றவள் என்று நீங்கள் நம்புகிறீர் களா இல்லையா?" டைகர் கேட்டான் இப்படி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/81&oldid=1708107" இலிருந்து மீள்விக்கப்பட்டது