பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்பான் கவிதைகள்


பகைப்பண்பு

யாரென்ன நினைத்தாலும் யாதாம், நம்மை
யாரென்ன உரைத்தாலும் யாதாம்? இந்தப்
பாரினிலே நண்பர்செய இயலா நன்மை
பகைவர்செய வல்லரெனப் பகர்வ ராய்ந்தோர் !
பாரினிலே நண்பர்செய இயலா நன்மை
பகைவர்செய வல்லரென லுண்மை யாயின்,
நேரினிலே யிலையெனினும் நெறியில் நாமும்
நெஞ்சார அவர்நலனை நினைப்போம் தோழா !

தெரிந்தேதான் தெரியாத திகைப்பி லேதான்
தினர்களுக் கொருதவறு செய்தோ மாயின்,
வருந்தியதை வையத்தார்க் கெடுத்துச்சொல்லி
வழிக்குநலம் வரப்புரிவோர் பகைவ ரென்பர் !
வருந்தியதை வைத்தார்க் கெடுத்துச் சொல்லி
வழிக்குநமை வரப்புரிவோர் பகைவ ராயின்,
திருந்தியதன் நெஞ்சுடையோராகி நாமும்
தினந்தோறும் அவர்நலனை நினைப்போம் தோழா !

மறந்தேனும் மயங்கியபுன்நிலையி லேனும்
மதியின மாயநடந்து கொண்டோ மாயின்,
'அறந்தானோ இதுவென்றே அறியக் கேட்டாங்
கறிவுநிலை கூட்டிடுவோர் பகைவ ரென்பர்!
அறந்தானோ இதுவென்றே அறியக் கேட்டாங்
கறிவுநிலை கூட்டிடுவோர் பகைவ ராயின்,
இறந்தா லும் பகைவருக்குத் தீங்கெண் ணாமல்
எப்பொழுதும் அவர்நலனை நினைப்போம் தோழா !

உணர்ந்தேனும், உவந்தவொரு நிலையி லேனும் ஒரமுறையாயொழுகி யொளித்தோ மாயின், கனந்தாழாதனைவரொடும் கூறி நம்மைக்

116