உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்பார்க்காதே. உன் கடமையை மெளனமாகச் செய். ஆனந்தம் அன்பில்தான் உள்ளது என்பதை அறிந்துகொள்", என்பது அப்பாவின் வாக்கு.

இன்று எனக்கு எல்லாச் செளகர்யங்களும் உள்ளன. இல்லை என்று சொல்வதற்கு என்தந்தையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால், அவரின் பத்துக்கும் மேற்பட்ட காவியங்கள் இதயத்தில் சுமையாக அமர்ந்து கொண்டு,"நீ சுகமா? நான் இங்கு சுகமில்லையே" என்று நையாண்டி செய்வதைத் தவிர.

கெம்பனுளிலிருந்த லிங்கையா என்பவர் மிகச் சிறந்த காந்தியவாதி. என் தந்தையின் மிகச் சிறந்த பக்தரும் கூட . இதோ நான் இருக்கிறேன், என அபயக்குரல் கொடுத்து அழைத்துச் சென்றார். தம் ஊரில் தந்தைக்கு ஒரு நல்ல பள்ளியை உருவாக்கி, எங்களைக் குடியமர்த்தினார். அம்மாவின் முகத்தில் சற்றே மலர்ச்சி! ஆனால் தொடர்ந்து வரும் விதியின் சிரிப்பை அவர் அப்போது உணர்ந்தாளில்லை.

"குழந்தாய்! என் பழைய செருப்புகளுக்கு என் மேல் அளவு கடந்த கோபமும், வெறுப்பும் இருப்பதை அறியாமல் தொடர்ந்து அதைத் துன்புறுத்த, அதுசமயம் பார்த்து என்மேல் பலமாக வஞ்சம் தீர்த்துக் கொண்டது. வலதுகால் பெருவிரல் ரணமாகிவிட்டது." என்றார்.

"அப்பா செருப்பு மட்டுமா உங்களை வஞ்சித்தது? வஞ்சித்தது வாழ்க்கையையே அல்லவா?" எனக் கேட்கத் தோன்றியது.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், கணவரிடம் கருத்து வேற்றுமை கொண்டு தாயின் வீட்டிலிருந்தாள். அவர்கள் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். கணவன் பலமுறை அழைத்தும், மாமியார் மனைவியை அனுப்ப மறுக்க, சினம் கொண்ட அவன் மாமியாரைக் கத்தியால் குத்திவிட, ஐயோ என்ற அலறல் கேட்டு ஓடிவந்த அம்மா.அவளைத்தாங்கிப்பிடித்ததும், உயிர் என்னவோ ஓடிப்போய் விட்டது.

42