பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 103 தேன்பழச் சோலே பயிலும் சிறுகுயி லேஇது கேள்ே வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை யாட்கொண்ட வள்ளல் ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய ஒருத்தன் மான்பழித் தாண்டமென் நோக்கி மளுளனை வேரக் கூவாய் (18-4) என்று குயிலையும், .தினைத்தனை உள்ளதோர் பூவினிற் றேன் உண்ணுதே கினைத்தொறும் காண்தொறும் பேசுக்தொறும் எப்போதும் அனைத்தெலும் புள்கெக ஆனந்தத் தேன்சொரியும் குனிப்புடை யானுக்கே சென்று தாய் கோத்தும்பீ (10-3) என்று அரசலண்டையும் ஆற்றுப்படுத்துகின்ருர், பறவை -யும் வண்டும் விலங்கும் பிறவுயிர்களும் அவர்தம் அருள் நோக் கால் நலம் பெற்று நனி சிறந்து விளங்கியிருக்கும் என்பதில் ஐயமுண்டோ? “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்’ என்பது திருக்குறள். எனவே இறைவனை அறியும் கல்வி நலம் சான்ற பெரியவர்கள் தாம் பெற்ற இன்பம் வையகம் பெறுக’ என்ற எண்ணத்திலே அனை வரையும் தழுவிச் செல்வர். இறையருள் பெற்ற நல்லவர்கள் அவ்வருள் நலத்தைத் தாமே துய்த்து மற்றவரை வாட வைக்க மனம் கொள்ளாதவர்கள். ஒரு படி மேலே சென்று, தாம் வாடினும் பிறரை வாழவைக்க வேண்டும் என்பதே அவர்தம் குறிக்கோள். தாயுமான அடிகள் இறையருள் பெறுவதற்கு, சேரவாரும் சகத்திரே என அனைவரும் ஒரு சேர வர வேண்டும் என அழைக்கின்ருர். எனவே நம்மணி மொழியாரும் அதற்கு விலக்கானவரன்றே? அவர் உலகத்த வரைத் தக்க காவலோடு வரச் சொல்லுகின்ருர். அமைச் சரன்ருே அவர்! எனவே உலக நிலையில் இறைவனை அடைய உயிர்களைக் கவசமிட்டுக் கொள்ளச் சொல்லுகின்ருர்; வாளேந்தச் சொல்லுகின்ருர்; பறையறையச் சொல்லு