பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அமைச்சர் 105 ஆலமுண் டான் எங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் ருன்வந்து முந்துமினே (36.5) என்று காட்டுகின்ருர். ஈண்டுக் காலம் என்ற சொல்லைப் பற்றிச் சிறிது கருதல் வேண்டும் என எண்ணுகின்றேன். தமிழில் காலம் என்னும் சொல் தொன்மை வாய்ந்தது. பொழுது என்ற ஒரு சொல்லும் உள்ளது. மணிவாசகர் இறைவனைக் காலமே' என அழைக்கின்ருர். ஒன்றுக்கு மேற்பட்ட இடத்திலே இறைவனே இவர் இவ்வாறு வருணிக் கின்ருர், அதன் கருத்தென்ன? இறைவன் பொழுதொடு படராப் புண் ணியன்’ என்பதையும் இவர் காட்டத் தவற வில்லை. எனவே இவர் காலத்தில் கண்டதென்ன ? தமிழில் காலம், பொழுது என்ற இரண்டும் நேரத்தைக் குறிக்க வருவன. ஒன்று வரையறுக்கப்படாதது; மற்ருென்று வரையறை செய்யப்பெற்றது. ஆங்கிலத்தில் Time, Duration என்ற இருசொற்கள் உள்ளமைபோன்று இவற்றைக் கொள்ளலாம். தமிழ் இலக்கிய இலக்கண மரபில் பெரும் பொழுது, சிறுபொழுது என இருவகைப் பொழுதுகள் உள்ள மையைக் காண்கின்ருேம். ஆனல் அவை காலமெனப் படுவதில்லை. எனவே மக்கள் எண்ண எல்லைக்குட்பட்டு அவர்களால் வரையறுக்கப்படுவனவெல்லாம் பொழுதாகவும் எல்லையற்று யாராலும் வரையறை செய்யப்படாததாய், அறிதோறறியாமை கண்டற்ருல் விரிந்து விரிந்து வளர்ந்து வளர்ந்து செல்வதைக் காலமாகவும் நம்முன்னேர் கணக் கிட்டனர் எனக் கொள்ளல் பொருத்தமானதாகும். அக் கால எல்லையில் இந்த ஞாலமும் பிறவும் வந்து வந்து போகும் என்பதைச் சிலர் காட்டுவர். ஆண்டவன் அக்காலத் தைப்போல் 'கால காலன’க உள்ளமையின் மாணிக்கவாசகர் அவ்விறைவனைக் காலமே' என அழைத்தல் பொருந்துவது தானே? அவர் வாய்மொழியைக் காண்போமா? மேலே வானவ ரும் அறி யாததோர் கோல மேஎன ஆட்கொண்ட கூத்தனே வெ-7