பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் போதியனவாகும். அவற்றின் விளக்கங்கள் அளப்பரியன: என் நினைவுக்கும் பேச்சுக்கும் எழுத்திற்கும் அப்பாற்பட்டன. எனவே அவற்றை விடுத்து, தம்மை மறந்த நிலையில் மணிவாசகர் காட்டிய சில உண்மைகளை மட்டும் ஈண்டுக் கண்டு அமையலாம். தம்மை மறந்தவர் எவ்வாறு இருப்பார் என்பதை முதலில் காணலாம். அவர்கள் எதையும் வேண்டமாட் டார்கள். நாம் முதலில் கண்டபடி ஒன்ருன இறைவனைப் பற்றியவர்களானமையின் பிறவற்றை அவர்கள் விரும்பார். கல்வியும் செல்வமும்கூட அவர் வேண்டாதன. இவை அனைத்தும் மேலும் மேலும் ஆர்வத்தையும் ஆசையையும் வளர்த்து, பற்றையும் பாசத்தையும் பெருகக் செய்வன. ஒன்ருன இறைவன் ஆசையைப் பற்றினல் பிற அற்றுத்தான் ஆக வேண்டும். இவை அனைத்தையும் வெறுத்தோ அன்றி விட்டுக் காட்டுக்கோ ஒடச் சொல்லவில்லை மாணிக்க வாசகர். அப்படி இருந்தால் திருவெம்பாவையும் திருத் தோளுேக்கமும் பிறபெண்டிர் பாடலும் தோன்றக் காரண மில்லையே? திருவெம்பாவையில் மணமாகாத கன்னிப் பெண்கள் வேண்டுகோளாக, "என் கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க’ என்ற நல்லடியவரோடு கூடும் காதல் வாழ்வை விரும்பும் நிலையை விளக்குகின்ருரே. எனவே அவர் எந்நிலையில் வாழ்ந்தாலும் பற்றற்ற வாழ் வினயே வற்புறுத்துகின்ருர். ‘தவம் செய்வார் தம் கருமம் செய்வார்’ என்றபடி அவரவர் கருமத்தைச் செய்கின்ற வர்களே செய்தவர்களே மெய்த்தவசிகளாவர் அன்ருே? கடமை வாழ்வில் தவருது, எனது யான் என்ற ஆசையற்று வாழ்தலே அவர் காட்ட விரும்பியது. குற்ருலநாதனைக் குழைந்து பாடும் அவர் வேருெரு பற்றினையும் வேண்டா நிலையினை, - உற்றரை ய்ான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன். கற்றரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்