பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தம்மை மறந்த அடியவர்-அரசர் திமிழையும் பண்பாட்டையும் வளர்த்த பெருமையால் சைவருக்கு எவ்வளவு பங்கு உண்டோ அவ்வளவு வைண வருக்கும் உண்டு. தமிழ் நாட்டுப் பழஞ் சமயங்கள் சைவ மும்வைணவமும்.பரத்துவமாகிய இறைநிலை உச்சியின் பெயர் அமைப்பினைத் தவிர்த்து வேறு பெரிய வேறுபாடுகள் இரண் டற்கும் இல்லை எனலாம்.கடைச்சங்க காலத்து முன்பிருந்தேஏன் ?-தொல்காப்பியர் காலத்திலிருந்து தென்னாட்டில் மட்டுமன்றி வட நாட்டிலும்கூடச் சைவம் வைணவம் இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியே வாழ்ந்து வந்தன. தமிழ் நாட்டுப் பெருங் கோயில்களைக் காணும் யாவரும் இன்றும் இந்த உண்மையை உணர்வர். அரியும் சிவனும்’ ஒண்ணு அறியாதார் வாயிலே மண்ணு' என்று தமிழ் நாட் டுப் பாமரப் பாட்டி இன்று இதை ஊர்தொறும் சொல்லிக் கொண்டிருப்பாள். இடைக்காலத்தில் வாழ்ந்த கம்பர் என்னும் காலங் கடந்து வாழும் பெரும் புலவர், அரனதிகன் உலகளந்த அரிஅதிகன் என்றுரைக்கும் பரகதிசென் றடைவரிய பரிசே போல் (அறிவி லார்க்குப் என்று உவமை வாயிலாக அரனேயும் அரியையும் வேறு. படுத்தி உயர்ந்த தாழ்ந்த வேறுபாடுகளைக் கற்பிப்பவர்