பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 119 க்ாஞ்சியில் அரசு செய்த காலத்தில் (கி. பி. 731-795) ஒாழ்ந்தவர் என்பது வரலாற்று ஆசிரியர்கள் கண்ட முடிவு. பாமாலை பாடிய வைணவ அடியார்களும் வாழ்ந் திருந்தனர். திருமங்கை ஆழ்வாரை ஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் என்று கூறுபவரும் உளர். எப்படி :யாயினும் இவரனைவரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர் என்பதில் ஐயமில்லை. இவருடைய வைணவப்பற்றையும் இறைவனிடம் தம்மை மறந்த நிலையையும் நன்கு போற்று வர். இவருடைய வரலாற்றில் தம்மை மறந்த நிலைக்குச் சில சான்றுகள் உள்ளன. - வால்மீகி இராமணப் பிரசங்கத்தை இவர் முறையாகச் சொல்லக் கேட்பது மரபு. அக்காலத்தில் கம்பருடைய இராமாயணமோ வேறு மொழி பெயர்ப்புக்களோ கிடையா. எனினும் இராமன் வரலாறு சங்க காலத்துக்கு முன்பே தமிழ் நாட்டில் பரவிய ஒன்று. இவர் வால்மீகி இராமா யணத்தை முறையாகக் கேட்டுக்கொண்டே வந்தார். அந்த நாளில் ஒருநாள் அரக்கர் 14,000 வரோடு இராமர் தனி யாகப் போரிட நேர்ந்தது என்ற கட்டத்திலே இவர் தம்மை மறந்தார். எம்பெருமான் ஒருவரே தனியாக நின்று அத்துணை ஆயிரக்கணக்கான அரக்கரோடு போரிடுவதா? என்று தம்மை மறந்து நைந்தார். ஏன்? இறைவன் முடிவி லாற்றலுடைமையையும் மறந்தார். இராமகாதையை இவர் முற்றும் அறிவார் ஆயினும், தம்மை மறந்த காரணத்தால் போர் அப்போது நடப்பதாகவே முடிவு செய்தார். உடனே தம் படைத் தலைவர் அனைவரையும் அழைத்துச் சேனை களோடு புறப்பட ஏற்பாடு செய்து, தாமும் இராம லுக்குத் துணை செய்வதற்காகப் போருக்குப் புறப்பட்டார். அவர் தம் மனநிலை அறிந்த அமைச்சர்கள் உடனே, ஒற்றர் மூலம் இராமர் வெற்றிகொண்டார்என்ற செய்தி வந்ததாகக் கூறினர். உடனே இவர் மகிழ்ந்து, தம் படை எடுப்பை நிறுத்தினர். இதைக் கேட்கப் பலருக்கு வேடிக்கையாகத் தான் இருக்கும். ஆயினும் இதனினும் தம்மை மறந்த நிலையில் வேறு என்ன ஏதுவினை எடுத்துக் காட்ட முடியும் ?