பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i22 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் பலவிடங்களில் தம்மைக் கொல்லி காவலன் என்றே குறிக் கின்ருர், கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன் (2-10) என்று மூன்று தலைநகர்களையும் குறித்து (கொல்லி-சேரர் கூடல்-பாண்டியர், கோழி (உறையூர்)--சோழர் தம்மைத் தமிழகம் முழுதுக்கும் அரசராக்கிக் காட்டுகின்ருர். இவர் காலத்தில் வடக்கே பல்லவ மன்னர் உயர்ந்திருந்த நிலையில் தெற்கே சோழபாண்டியப் பேரரசுகள் நிலை குலைய இவர் அந்நாடுகளையோ அவற்றுள் சில பகுதிகளையோ கைக் கொண்டு ஆண்டிருக்கலாம்.இந்த இடமேயன்றி இவர் தம்மை வீரராகவும் சிறந்தவராகவும் கொல்லி நகர்க்கிறையவராக வும் கூறிக் கொள்ளும் இறுதிப் பாடல்களும் உள. அவற்றுள் சில காண்போம், குடைவிளங்கு விறல்தானைக் கொற்ற ஒள்வாள் கூடலர்கோன் கொடைக்குல சேகரன் (1-11) கொங்கர் கோன்குல சேகரன் (3-9) சொல்கவிலும் கூர்வேல் குலசேகரன் (4-11) கொற்றவேல் தானைக் குலசேகரன் (5-10) கொல்லி ககர்க்கிறை கூடற்கோமான் குலசேகரன் (6-10) கொல்லி காவலன் மாலடி முடிமேல் கோலமாம் குலசேகரன் (7-11) சொல்நவிலும் வேல்வலவன் குடைக்குல சேகரன் (8-11) கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குல சேகரன் (9-11)