பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 127 சிலர் நினைக்கின்ருர்களன்ருே? அவர்களுக்கெல்லாம் புதில் சொல்லவேண்டிய கடப்பாட்டில் ஆழ்வார் ஒரு விளக்கம் தருகின்ருர் என்னவென்று காண்போமா ? வன்பெரு வானகம்உய்ய அமரர் உய்ய மண் உய்ய மண்ணுலகில் மணிசர் உய்ய துன்பமிகு துயர கல அயர்வொன் றில்லாச் சுகம்வளர அகமகிழும் தொண்டர் வாழ அன்பொடு தென்திசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு நாளும் 1 இசைந்துடனே என்றுகொலே இருக்கும் நாளே.(1.10) என்று அவன் தென்திசை நோக்கிப் பள்ளிகொள்வதற்கும் அம்பலவன் தெற்கு நோக்கி ஆடுவதற்கும் இருவேறு சமயத் தவரும் ஒரே பொருள் கூறுவர். அரங்கம், அம்பலம் என்ற இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பன - பெருவெளி என்பது அது. பின் ஆடும் சாலைக்கும் ஆற்றிடைக் குறைக்கும் பிற மன்றங்களுக்கும் அவை பெயராக அமைந்தன. எனினும் அப்பரந்த அரங்கத்தே-அம்பலத்தே-பெரு வெளியிலே இடையருது ஒருவன் அமைதியாகப் படுத்தும் மற்றவன் உற் றெழுந்து ஆடியும் இருப்பதற்குக் காரணம் பேரண்டப் பெருவெளியிலே அனைத்தையும் படைத்தும் காத்தும் கரக்கும் இறைவனின் அருள் கருணைநோக்கு என்றும் அடிய வரைச் சுற்றி நிற்கவேண்டும் என்பதே. துன்பம்-இடர் அல்லது சாவு. அதற்குத் தலைவனுய இயமன் தென்திசையில் உள்ளமையின் அவன் வராதவகையில் அடியவரைக் காப்ப தற்காக இருவரும் தெற்கு நோக்கி உள்ளனர் என்பர். அடி யவர்-மெய்யடியவர் என்றும் சாகாவரம் பெற்றவரன்ருே? ஒரு பாட்டில் இவர் தொண்டர் அடிப்பொடி ஆட நாம் பெற்றிடில் என்றே குறிக்கின்ருர், இஃது இவரை ஒத்த அடியாராகிய தொண்டரடிப் பொடியாழ்வாரைக் குறிக்கும்