பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் காருைய்ப் பாயும் கருத்துடைய்ன் ஆவேனே, அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய் கண்பேனே என்று பல வகையில், வேங்கடவன நோக்கி வேண்டிய குலசேகரர் இறுதியாக இவற்றுள் எதுவாகப் பிறக்கவும் அடையவும் நீ வரந்தரா விட்டாலும், ஏதாவதொன்ருக உன் மனயில் பிறக்க அருள் வாய்' என்கின்ருர் செம்பவள வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் திருமலையில் ஏதேனும் ஆவேனே (4.10) என்பது இவர் வாக்கு ஒருவேளை இந்த அடியவருக்கு மறு பிறவி இருந்திருக்குமால்ை இவர் திருவேங்கடத்திலேயேஅதிலும் அவ்விறைவன் அருகிலே எப்போதும் வீற்றிருக்கும் வகையிலேயே பிறந்திருப்பார் என்பது உறுதி. ஆனல் இவருக் கும் மறுபிறப்பு உண்டேயோ ? . இவர் அடுத்துவரும் வித்துவக் கோட்டு’ப் பதிகத்தில் பல உவமைகளைக் கையாளுகின்ருர். இவை அனைத்தும் எண்ணி எண்ணி மகிழத்தக்கனவாம். ஒவ்வோர் உவமை யும் ஒவ்வொரு வகையில் சிறந்ததாக அமைந்து, தத்தம் வழியில் உயிருக்கும் ஒன்ருன இறைவனுக்கும் உள்ள தொடர்பினைக் காட்டுவதறிந்து மகிழ வேண்டியதாகும். குழவி சிறு குறைகள் செய்கின்றது. தாய் ஒரு வேளே இல்லையாயினும் ஒரு வேளை கோபித்துக் கொள்வாள். அதளுல் அக் குழந்தையை அதட்டுவாள்-ஒதுக்குவாள். (அது பொய்க் கோபமேயாம்.) இருப்பினும் அதனல் குழந்தை தாயை விட்டு அப்பால் செல்லுமோ? மீண்டும் மீண்டும் தன் தாயைத்தான் அஃது அணைத்துக் கொள்ளும். இது தான் உலகியல். இந்த உண்மையைக் காட்டி, ஆழ்வார் உயி ராகிய குழந்தை செய்யும் தவற்றுக்காக இறைவன் கோபம்