பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் கொண்டார். 14-வது வயதில் திருமதி செல்லம்மாளை மணந் தார்: எளிய வாழ்வு வாழ்ந்தார். வீரம் இவரோடு சேர்ந் திருந்தது. எனவே ஒரு சிறு வேறுபாட்டின் காரணமாக இவர் எட்டையபுரத்தை விட்டு வெளியேறினர். 1898 இல் காசி சென்று நான்கு ஆண்டு தங்கினர். இந்துஸ்தானி கற்ருர்; ஆங்கிலமும் நன்கறிந்தார். ஆகப் பல மொழி அறிந்தவ ரானர். பின் 1902-இல் தமிழ் நாடு திரும்பினர். இளமை யிலேயே பல பாடல்களைப் பாடிய இவர் பின், நாட்டு நிலைக் கேற்ப அந்நியரை விரட்டி அடிமை வாழ்வு அகற்றி மக்கள் நலம் பெறத்தக்க நெறியில் பல நல்ல தேசிய கீதங்களைப்’ பாடினர். பின் அரசாங்க அடக்குமுறை காரணமாக1908 இல் புதுவை சென்று 1918இல் மீண்டார்.புதுவையில் அவர் பாடிய' பாடல்கள் பலப்பல-அவையே அவர்ை என்றும் வாழவைக்க உதவுகின்றன. பின் தம் மாமியார் வீட்டில் கடையத்தில் சிலநாள் தங்கினர்.1919இல்சென்னை வந்து சுதேசமித்திரனில் பணியாற்றினர். அதற்குள் அவரது பாடற்ருெகுதி வெளி வந்தது. தம்மை மறந்த கவிஞராகிய புலவர் பாரதி-கவிதை யால் என்றென்றும் வாழ முடிவு செய்தமையின்-திருவல்லிக் கேணி கோயில் யானையால் துன்புறுத்தப் பெற்று நோயுற்று 11-9-1921இல் அமரானுர். அவர் கவிதைகள் அவரை என் லும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. பாரதியார் தம் காலத்தில் தமிழுக்குத் தளராது தொண்டு செய்து கொண்டிருந்த சாமிநாத ஐயர் அவர்களைப் பற்றிய பாடல் இங்கு நினைவுக்கு வருகிறது. தமிழ்த் தொண்டே வாழ்வாகக் கொண்ட ஐயரவர்கள் பெரும் வாழ்க்கை வசதிகளைப் பெருது நின்ருலும், அவர் புகழ் என்றென்றும் வாழும் வகையில் தமிழ் உள்ளவரையில் சிறக்கும் என்பதைப் பாரதியார் காட்டியுள்ளார். நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி இன்பவகை கித்தம் துய்க்கும் கதியறியோம் என்றுமணம் வருந்தற்க குடந்தைங்கர்க் கலைஞர் கோவே