பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதி-என்றும் வாழும் கவி 161 இவ்வாறே சமூகத்தே ஆடவரும் பெண்டிரும் ஆற்ற வேண்டிய கடமைகளையும் அவ்வாறு ஆற்றின் அவர்கள் நிலைத்த வாழ்வைப்பெற்றுச் சிறப்பார்கள் என்ற உண்மை யினையும் எத்தனையோ இடங்களில் எடுத்துக் காட்டுகின்ருர். அவை அனைத்தும் இங்கு முன்னரே பலரால் எடுத்துப் பேசப் பெற்றிருக்குமாதலின் நான் அவற்றையெல்லாம் விட்டு மேலே செல்கின்றேன். இறுதியாகத் தாம் சாகாத கவிஞராக வாழ்வதுமன்றி உலகிலேயே சாகாது வாழ வழி வகை இது என அவர் காட்டிய காரணங்களைக் கண்டு அமைதல் பொருந்துவதா கும். முதலாவதாக நாம் காணும்போது தனக்கென வாழாத் தன்மையே சிறந்தது எனக் கண்டோம். அதே தன்மைதான் மனிதனைச் சர்காமல் வாழ வைக்கிறது. தான் என்ற முனைப் பும் அம் முனைப்பின் காரணமாக எழுகின்ற கோபம், பொய் முதலியனவும் மனிதனை விரைவில் அவன் இறுதிக்கு ஈர்த்துச் செல்லுகின்றன. இக்கருத்து வெறும் வேதாந்தம் என்று நினைக்க வேண்டாம். வாழ்வினுக்கே இது பொருந்துவ தாகும். நாடெங்கும் வாழத்தாம் வாழ்வதே நலஞ் சிறந்தது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நலஞ் சிறந்த கொள்கைக்கு அடிப்படை எவை எவை என்பதைத்தான் வள்ளுவர் தம் திருக்குறளில் நன்கு எடுத்துக் காட்டிச் சென் ருர். அவரடி போற்றி அவர் பின் வந்த அத்துணைத் தமிழ்ப் புலவர்களும் பிறநாட்டுப் பிறமொழி அறிஞர்களும் அந்த அடிப்படையிலேயே அறநெறியை வற்புறுத்திச் சென்றனர்செல்லுகின்றனர். இந்த அறத்தாறு வாழின் வாழும் அந் நல்லுயிர் தன் கால எல்லேயில் எல்லா நலன்களும் பெற்றுச் சிறப்பதோடு-மறுமையில் உயர்நலம் உறுவதோடு-உலகம் உள்ளளவும் சாகா வரம் பெற்றவகையில் புகழ் உடம்பு கொண்டு இப்புவியில் வாழும். இத்தந்திரத்தை நம் பாரதி தன்கு அறிந்தவராதலால் பார்மீதில் நான் சாகாதிருப்பேன் கண்டீர்' என உலகினரை நோக்கிக் கூறி,அவ்வாறு சாகா வரம் பெற்று உலகம் உள்ளளவும் வாழவும் தலைப்பட்டுவிட்டார்.