பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்


سعی-اجت-محیه

விடியற் காலையில் அனைவரும் ஆசிரியர் வீடு தேடிச் செல்வர். குருகுல வாசத்தில் ஆசான் இல்லமே மாணவர் கல்விக் கூட மாக இலங்கிற்று. சில ஆண்டுகளுக்கு முன்வரை மாணவர் ஆசிரியர் வீடுகளை விடியற் காலையில் நாடிச் சென்றனர். முறைப்படி நூலின்றெனினும் முறையம் சொல்லும் வகை யில் பல இலக்கியங்கள் கற்றனர். ஏடாயிரங் கோடி எழு தாமற் படித்த விரகர் பலர் இருந்தனர். இந்த வகையில் கல்வி உளத்தொடு பொருந்தி நன்கு வளர்ந்தது. அது மட்டு மன்றி ஒவ்வொரு துறையிலும் வல்லவர் பலர் வளர்ந்து வந்த னர். வட மொழியிலும் இத்தகைய நிலையிலேயே கல்விநலம். கண்டனர். ஆனல் இன்றைய கல்வி நிலை என்ன? நல்லாசிரியருடன் நாள் முழுதும்-இளமைக்காலமெல் லாம் இருந்து பழகின் படிப்புமட்டுமன்றிப் பண்பும் வளரும்: என்ற நிலையில் அன்றைய குருகுலவாசம் அமைந்திருந்தது. அதல்ை கல்வியொடு ஒழுக்கம், பண்பாடு, கட்டுப்பாடு முத லிய நல்லியல்புகள் அனைத்தும் நாடொறும் வளர்வுற்று வந்தன. இன்றைய கல்விமுறையில் நல்லாசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் அத்துணை நெருங்கிய தொடர்பு இல்லை ஒரு நாளைக்கு ஏழு அல்லது ஐந்து ஆசிரியர்களை மாணவர்கள் காணவேண்டும். ஆண்டுதோறும் வேறு வேறு ஆசிரியர்கள் முகம் காணவேண்டும். ஆசிரியர் அனைவரும் பண்டைய ஆசிரியர் மரபைக் காக்கின்ருர்கள் என்றும் கூறமுடியாது. இந்த நிலையில் மாணவர்தம் இன்றைய வாழ்வில் அமைதி: யைக் காணமுயல்கிருர்களே? மேலும் அக்காலத்தில் கல்விக் கூடத்தில் கல்விக்கே முதலிடம் கொடுக்கப்பெற்றிருந்தது. ஆல்ை இன்று படிப்பு இரண்டாவதாகவே உள்ளது, ஏதோ ஆண்டுக்கொரு தேர்வு என்று இருப்பினும், படிக்கும் நேரம் மிகக் குறைவே. வேடிக்கை, விளையாட்டு, சுற்றுலா, கண்காட்சி என்று இந்த வகையிலேயே அவர்தம் நேரத்தின் பெரும்பகுதி வீளுக்கப் பெறுகின்றது. மாணவர்தம் பேச்சுத்திறனையும் கலை ஆர்வத். ன் தயும் வளர்க்கத் தோற்றுவிக்கப் பெற்ற மன்றங்கள் அர