பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாகலாம்; ஆனல் அவற்றினும் மேலாக உள்ள நிலையே நாகரிகத்துக்கு அடிப்படையாகின்றது. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர் (குறள், 580) நஞ்சும் உண்பர் நனிநா கரிகர் (நற். 355) என்பன போன்ற நேற்றைய பழந்தமிழ் அடிகள் நமக்கு உண்மை நாகரிகத்தை உணர்த்தவில்லையா? பண்பாடும் இத் தகையது. - பண்புடையாப் பட்டுண் டுலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் - (குறள், 996) என்று வள்ளுவர் இவ்வுலக வாழ்வுக்கே அப்பண்பினை அடிப் படையாகக் காட்டுவர். இன்று இப்பண்பும் நாகரிகமும் நாட் டிலும் உலகிலும் பெருகி வருகின்ற காரணத்தினலேதான் மக்கள் விலங்காகி மாள்கின்றனர். நாளைய சமுதாயத்தை உருவாக்க நிற்கும் மாணவர்களாகிய உங்களது இன்றைய பணி இத்தகைய பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகி லும் நாட்டிலும் வாழ வழி வகுப்பதுதான். வகுத்து ஆக்கப் பணி புரியுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். இப்படியே வாழ்வியலில் ஒவ்வொரு கூறுபாட்டினை முக் கால எல்லையிலிருந்து ஆராய்ந்துகொண்டே போகலாம். கலை யின் பெயரால் மக்கள் இன்று நிலைகெட்டு வருவதைக் கண்டு நல்லவர் உள்ளம் நலிகின்றனர்; அல்லார் செம்மாகின்றனர். உடலெல்லாம் தெரியக் காட்டியும் உரக்கக் கூக்குரலிட்டும் ஆடியும் பாடியும், தேவை இல்லாத வகையிலெல்லாம் கலை வளர்க்கும் கண் அருக்காட்சி நாட்டில் நாள்தோறும் நடக் கும் காட்சிகளாகி விட்டன. நாளைய சமுதாய வாழ்வு நல்ல வாழ்வாக-உலகம் போற்றும் வாழ்வாக-செம்மை வாழ்வாகச் சிறக்க வேண்டுமாயின் இவை அனைத்தும் இன்றே செம்மை -யாக்கப் பெறல் வேண்டும்.