பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் 27 கொளற் பொருட்டே’ (உரி. 46) என்ற சூத்திரத்தால் மக்கள் வாழ்வியலில் வேண்டுவன பெறும்பொருட்டு வேண்டி வரங் கிடக்கும் நிலையில் போற்றப்படுவதே தெய்வம் எனக் காட்டி விட்டார். இன்னும் கொடிநிலை, கந்தழி என்ற சூத்திரத்தும் கருப்பொருள் பற்றிய சூத்திரத்தும் தெய்வங்களை முதலாகக் காட்டுவர். எனவே தொல்காப்பியர் கால வாழ்வியலில்அவர் காட்டும் வாழ்வியலில்-தெய்வம் முதலிடம் பெற் றுள்ளது தேற்றம். இக்கடவுள் அருள்நெறி பற்றியே அகமும் புறமும் அவற்றின் வழி அமைந்த பிற வாழ்வியற் கூறுபாடு களும் இருந்தன என அறிகிருேம். - மரபியலில் தொல்காப்பியர் அக்கால மரபில் உள்ள பல வகைகளை விளக்கிக் காட்டுகிரு.ர். நாம் மேலே கண்டபடி புல்லும் மரமும் தொடங்கி, மனித இனம் வரையில் படிப்படி யாக உயரும் வகை, வளம், வாழ்க்கை இவற்றின் மரபுகளை நமக்குக் காட்டுகின்ருர். ஒவ்வொன்றையும் எப்படி எப்படி அழைக்க வேண்டும் என எடுத்துரைக்கின்ருர். விலங்கிலும் பறவையிலும் பிற உயிரினத்தும் உள்ள ஆண் பெண் வேறு பாடுகளே நுண்ணிதின் ஆராய்ந்து, அவற்றின் பெயர்களையும் காட்டுகின்ருர். ஒரறிவு, ஈரறிவு, மூவறிவு, நான்கறிவு, ஐயறிவு, ஆறறிவு பெற்ற உயிர்களையும் அவற்றின் இனங்களை யும் பகுத்துக் காட்டுகின்ருர், புல்லுக்கும் மரத்துக்கும் உரிய வேறு பாட்டை விளக்குகின்ருர். இவை ஒவ்வொன்றையும் தனித் தனியாக விளக்கின் எல்லையற்றுப் பெருகும். எனவே அவைபற்றிய சூத்திரங்களைத் தொடுத்து ஈண்டுத் தருகிறேன் குழவிகளைக் குறிக்கு வரும் மரபு: மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்று ஒன்பதும் குழவியோடு இளமைப் பெயரே (மரபு. :) ஆண்பால் குறிக்க வருவன: ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும் சேவும் சேவலும் இரலையும் கலையும்