பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் 29 இவையன்றி அந்தணர் அரசர், வணிகர், வேளாளர் என் வகைப் படுத்திவாழ்ந்த மக்களினத்துக்கு உரிய வாழ்க்கை முறைகளையும் நன்கு காட்டுகிருர். இவற்றைக் கூறிய தொல் காப்பியர் இப்பகுப்பினைக் காட்டிய ஆரியர் வருகைக்குப் பின்னரே இருந்திருக்க வேண்டும் எனக் கொள்ளல் வேண்டும். இக் கொள்கைக்கு மாறுபட்டோர்-தொல்காப்பியர் ஆரியர் வருகைக்கு முன்னே இருந்தவர்-எனவே இவை பிற்சேர்க்கை என ஒதுக்குவர். பின்னது அவ்வளவு வலியுடைத்தன்று. மேலும் ஒவ்வொரு துறையிலும் வாழ்வார்தம் வாழ்க்கை முறைகளையும் தொல்காப்பியர் எடுத்துக் காட்டியுள்ளார். புல்லுக்கும் மரத்துக்கும் வேறுபாடு காட்ட எண்ணிய ஆசிரியர், புறக்கா ழனவே புல்லென மொழிப - அகக்கா ழனவே மரமென மொழிப' (மரபு. 85) இப் புல்லும் மரமும் பெற்றுள்ள பல்வேறு சிறு சிறு பகுதி களுக்கு உரிய விளக்கம் காட்டுவர். மெலும் உலக நிலையை எண்ணி, நிலம்.தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆg லின் இருதிணை ஐம்பால் இயல்கெறி வழாஅமை திருவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் (மரபு. 89) என்று உலகத் தோற்றத்திற்கே அடிப்படை கூறி, இவ்வுலகம் பஞ்சபூத அமைப்பில் தோன்றி வாழும் தன்மையை விளக்கி, இதில் தோன்றிய உயிரினங்களை எவ்வெவ் வகையில் அழைக் கவோ அமைக்கவோ வேண்டும் எனக் காட்டி, இறுதியில் இந்தத் தொல்லோர்வகுத்த அடிப்படையில்,வாழ்ந்தால்தான் உலகம் என்றென்றும் நலம் பெற்று வாழும் எனக் காட்டி, உலக வாழ்வியலையே வரையறை செய்கின்ருர். இவ்வாறு ஓரறிவு பிர் தொடங்கி ஆறறிவுடைய மனிதன் வரையில்