பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே! 53. கள்வகை நமக்குக் காட்டுகின்ருர். அத்தலைவன நினைந்து நினைந்து நெஞ்சுநெக்குருகும் தலைவி, அந்தநினைவுக் கெல்லாம் தன்னைக்காயாத தலைவனின் பெருந்தன்மையை எண்ணிவியக் கின்ருள். அவனைக் கனவிடைக் கண்டு களிக்கின்ருள். அவன் - பிரியும்போது தன் நினைவே இல்லையாயின் கனவிலேயே கண்டு கண்டு களிக்கலாமே எனஎண்ணுகின்ருள் அவள். துஞ்சுங்கால் தன் தோள் மேல் இருந்த தலைவர் விழித்தவுடன் எப்படி நெஞ்சத்துள் புகுந்தார் என வியக்கிருள். வள்ளுவர் இவைகளைப் பல குறள்வழிக் காட்டுகின்ருர், அவற்றுள் ஒரு சில இவை. - காமம் விடுஒன்ருே காண்விடு கன்நெஞ்சே யானே பொறேன்.இவ் விரண்டு. (குறள், 1247) நனவென வொன்றில்லை யாயின் கனவின்ை காதலர் நீங்கலர் மன் (குறள், 1216) துஞ்சுங்கால் தோள் மேல ராகி விழிக்குங்கால் கெஞ்சத்தா ராவர் விரைந்து (குறள், 12.18) எனைத்து கினைப்பினும் காயார் அனைத்தன்ருே காதலர் செய்யும் சிறப்பு (குறள், 1208) வாழ்வார்க்கு வானம் பயந்தற்ருல் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (குறள், 1192). இவ்வாறு தலைவன் தலைவியர் வாழ்க்கை முறையைக் காமமோ பெரிதே' எனக் காட்டிய வள்ளுவர், தம் காமத் துப் பாலின் இறுதியில் புலவி, ஊடல், நெஞ்சொடு புலத்தல் முதலிய அதிகாரங்களால் அவர்தம் தெய்வப் பிணைப்பை நன்கு விளக்குகிருர். நாமும் அது கண்டு அமைவோம். தலைவன் தலைவியைக் கட்டித் தழுவி இம்மையில் உன் னைப் பிரியேன்” என்று கையடித்துச் சொல்லுகிருன். அதைக் கேட்டு மகிழவேண்டிய தலைவி வாடுவதாக-அழுவதாகக்