பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமேர் பெரிதே! 55 இவற்றைக் கருத்தில் கொண்ட வள்ளுவர் காதல் வாழ்விலும் இவற்றைப் புகுத்துகின்ருர். வழுத்தினுள் தும்மினே கை அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினிர் என்று (குறள், 1317) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் ஸ்ம்மை மறைத்திரோ என்று - (குறள், 1318) என்ற குறள் இரண்டும் நுனிந்தறிந்து நோக்கி உணர்ந்து மகிழற்பாலனவாகும். இப்படியே, தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இங்ரீரர் ஆகுதிர் என்று (குறள், 1319) கிணத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர் யார் உள்ளி நோக்கினிர் என்று (குறள், 1320) என்றும் வள்ளுவர் காமச் சிறப்பை அதன் உச்ச நிலையில் வைத்துக் காட்டுக்கின்ருர். இவையெல்லாம் நாம் முதலில் கண்டபடி இன்பவளர்ச்சியைப் பெருக்கத்தான் அமைந் தனவே ஒழியத் தலைவனின் வேற்று நட்பால் விளைந்ததென்று கூறமுடியாது. பிரிவுத் துன்பத்தை நீக்கும் பிரிவின் நிலையில் இவை அமைந்தன என்று கொள்ளுவதே பொருத்தமாகும், ஏனெனில் இவை இல்லையாயின் காமம் சிறந்ததாகாது என்பதை வள்ளுவரே, உப்பமைந் தற்ருல் புலவி அது சிறிது மிக்கற்ருல் நீள விடல் (குறள், 1302) துணியும் புலவியும் இல்லாயின் காமம் - கனியும் கருக்காயும் அற்று (குறள், 1306) என்று காட்டுவர். எனவே காமம், இன்பம் பெருகவே இவை பயன்பட்டனவேயன்றி வேறு தலைவனுக்கோ தலைவிக்கோ மாசு கற்பிக்க இவை அமையவில்லை என்பது தேற்றம்,