பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வெள்ளிவிழாச் சொற்பொழிவு என்ற அடிகளில் புலவர் எத்துணையோ பேருண்மையை விளக்கிக் காட்டிவிட்டார். இதற்குமுன் அடிகளில் அழல் வாய் சுடலையில் உள்ள அவலநிலையைக் காட்டியுள்ளார். அதன் வழி எல்லார் புறனும் கண்டும் மனிதன் உள்ளம் மாற வில்லையே என வருந்துகின்ருர். ஆம்! புறம் காண்பது காஞ்சிநிலை. நிலையாமை உணர்ந்தால் என்ன செய்ய வேண் டும்? உலகைவிட்டு ஒடுவது தமிழர் மரபு அன்று. நீண்ட மதுரைக் காஞ்சியைப் பாடிய மருதனுர் உலக நிலேயாமை யைப் பல அடிகளில் உணர்த்தி, இந்த நில்லா உலகத்து நிலைக்குமாறு புகழொடு பொருந்தி இல்லற வாழ்வில் வாழ வேண்டுமெனவே நெடுஞ்செழியனுக்கு அறிவுறுத்துகிரு.ர். அவ்வாழ்விலேயே உலகெலாம் ஒத்து நோக்கும் அன்பு மல ரும். அவ்வன்பே வாழ்வின் அடிப்படை. அந்த ஞானம் வந்தால் பின் வேறெது வேண்டும்? இதைத்தான் தாயங் கண்ணனுர் மன்பதை எல்லாம் தானுய்த் தன்புறங் காணல் வேண்டும்’ எனக் காட்டுவர். 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முன் கண்டதும் இந்த அடிப்படையில் முகிழ்த்ததேயாகும். இவ்வாறு எல்லாரையும் ஒத்து நோக்கித் தன்னுயிர்போல் மன்னுயிரை ஒம்புவதே அன்புநெறி. அந்த அன்புநெறியில் வாழ வகையில்லேயாயினும், இடுகாட்டில் எல்லோரும் மறைவதைக் கண்டு அஞ்சியாகிலும் உளம் செம்மை பெருதா என ஏங்குகின்ருர் புலவர். எப்படியாயி னும் எல்லாரையும் எல்லாவற்றையும் தாமாக ஒத்து நோக்கி, உற்ற அன்பால் அனைவரையும் பிணைத்து வாழ வழி காண் பதே சமுதாயத்தை வாழவைக்கும் வழி என்பதை உணர்ந்த புலவர்கள் வேறு என்ன சொல்ல முடியும்? சோழன் நலங்கிள்ளியைப் பாடிய முதுகண்ணன் சாத்தனர் மற்ருெரு பாட்டிலே அம்மன்னனே முன்னிழுத்து நல்லவர் யாரொடு நட்புடையராக வேண்டுமென்றும் யாரொடு கூடலாகாது என்றும் கூறுகின்றர். அவற்றுள் ஒன்றை எண்ணலாம். உலகில் நன்மை தீமை இரண்டும் விரவியே நின்கின்றன. நல்லது செய்தார் நன்மை பெறு